உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மறைமலையம் – 9

என்னும் புறப்பாட்டிற்

காண்க .

நடுவு நடுநிலைமை.

நண்ணார்

பகைவர்.

நந்தா – அவியாத.

நயந்தும் - விரும்பியும்.

நறவு - கள்.

நறு – நல்ல.

நன்பகல் - உச்சிப்பகல், புறப்

பொருள் வெண்பாமாலை உரை, வஞ்சிப்படலம்.

நனந்தலை – அகன்ற இடம், தொல்காப்பியம், உரியியல்,

நனி - மிகுதி, தொல்காப்பியம், உரியியல்.

நாடி - ஆராய்ந்து.

நாண்மீன் - நட்சத்திரம்.

நாப்பண் – நடு.

நாவாய் - மரக்கலம்.

நிரைத்து வரிசையாக வைத்து.

நிலைஇய – நிலைபெறற்குக்

காரணமான.

நிறீஇ - நிலைபெறச் செய்து.

நுகம்

வண்டிமாட்டுகளின் பிடரிற் றங்குங் குறுக்குக் கட்டை. இதனை 'நுகத்தடி’ என

வழங்குப.

நுதல் - நெற்றி.

நெய்தல் - குவளைப்பூ.

நெருஞ்சி ஒரு முட் பூண்டு.

நேரிழை – ஏற்ற அணிகலம், பரிபாடலுரை.

நொடை – விலை.

நோன் - வலிய.

பஃறகைப்பு - ‘பல் தகைப்பு' பல பகுதிகள்; பலகட்டுகள்.

பஃறி - - படகு, 'தோணி' என்பர் திவாகரர்.

பகடு பெருமை, 'பகட்டெருத்து' பெரிய எருது, பேரெருது.

பகர்ந்து – வெளியாகச் சொல்லி.

பகல் - நுகத்தின் நடுவிற் றைத்த

ஆணி.

பசும்பதம் - பசிய சோறு.

படப்பை - தோட்டம், பிங்கலந்தை.

படிக்கால் - ஏணி, “வானுலக மேறுதற்குச் செம்பொன், இருளில் படிக்கால்” என்றார் சீவகசிந்தாமணியிலும்.

பண்ணியம் - பண்டம், "குரங்

கருந்து பண்ணியம்” என்னும் பரிபாடலுரையிற்

பரிமேலழகர் இப் பொருளே கூறுதல் காண்க.

பணிபு - தாழ்ந்து.

பணியம் பண்டம், 'பண்ணியம்’ பணியம் என நடுவே தொக்கது.

பணை

குதிரைப்பந்தி, இலாயம்,

மருதநிலம்.

பதம் - சோறு, உணவு.

பதாகை (வடசொல்) - பெருங்

கொடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/253&oldid=1579510" இலிருந்து மீள்விக்கப்பட்டது