உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

பம்பி - அடர்ந்தெழுந்து, 'கதித்தல் பம்மல் கஞறல் கன்றல், எழுச்சியின் மிகுதிக் கெய்தும் பெயரே" என்றார் திவாகரரும்.

பரதவர் - செம்படவர், நுளையர்,

பரி

"கடலோடுழந்த பனித் துறைப் பரதவ” என்றார் பதிற்றுப் பத்தினும்.

செலவு, செல்லுதல், “நிமிர் பரியமா” என்புழியும் இப் பொருள் காண்க. புற நானூற்றுரை.

பருவம் - பொழுது.

பரேர் - ‘பருஏர்' பெரிய அழகு. பலி - தேவருணவு, வடசொல். பள்ளி - தவத்தோர் இருப்பிடம், இப் பொருட்டாதல் புறப் பொருள் வெண்பாமாலை யுரை யிலுங் காண்க. வஞ்சிப் படலம்.

பறழ் - பன்றிக்குட்டி, "குட்டியும் பறழுங்கூற்றவண் வரையார்” என்னுந் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தால் பன்னிக் குட்டியும் பறழ் எனப்படுதற்குரித்தாதல்

பாகு

காண்க.

குழம்பு.

பாசிழை – ‘பசுமை யிழை' பசிய அணிகலன்.

பிடி - பெண்யானை.

பிணர் - பொரிந்த வடிவு சருச்சரை.

பிணி - கட்டு, வார்க்கட்டு. பிணிக்கும் - கட்டும்.

பிணியகம்

221

சிறைக்களம்.

பிணை மானினத்திற் பெண், தொல். மரபியல்.

பிழி – கள்.

பிளிறு – முழங்கும்.

பிறங்கு - விளங்கும், உயர்ந்த, "பிறங்குநிலை மாடத்

துறந்தையோனே”,

புறநானூறு.

பீடு - பெருமைத் தன்மை.

புகர் - நிறம்; பச்சென்ற நிறம், திவாகரம்.

புணரி - கடல்.

புதவம் - அறுகு, ஒருவகைப்புல் என்பர் பிங்கலந்தையுள்

-

புதவு வாயில், "பூரித்துப் புதவந் தோறும்" என்றார் சீவக

சிந்தாமணியினும்.

புதை – அம்புக்கட்டு.

புயல் மழை

புரவி குதிரை.

புலம் - நிலம்.

புலம்பெயர் - தம் நிலத்தைக் கை விட்டுவந்த.

புலவு - பூலால், புலால் நாற்றம்.

புலிப் பொறித்து - புலியினுருவை இலச்சினையாக இட்டு

புழுக்கு - புழுக்கின இறைச்சி, "யாமைப் புழுக்கின்’”

என்றார் புறநானூற்றினும். புழை சிறுவாயில், திவாகரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/254&oldid=1579511" இலிருந்து மீள்விக்கப்பட்டது