உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

249

கேட்கின்றிலீர்கள்; இதுதானே நீங்கள் எனக்குச் செய்யும் நன்மை? சொல்லுமின் என்னும் ச்செய்யுட்பொருளை

உணருந்தோறும் எம்மனம் இளகுகின்றதே! ஆ! நல்லிசைப்புலவர் மெல்லிசைப் பாவால் மனம் உருகாதார் உலகத் துளராயின் அவரைக் கல்லென்றுரைப்பேமோ, மரமென்றுரைப்பேமோ அறியேம். இன்னுங் கதை தழீஇ வாராத தேவாரம் திருவாசகம் போன்ற அருமைச் செந்தமிழ்ப் பாட்டுக்களை ஓதும்வழிக் கண்ணீர் துளும்ப உரைகுழறி மனம் நெக்குநெக்குருகி நிற்பாரைக் காண்டுமன்றே? இதன் உண்மை,

“உலவாக் காலந் தவமெய்தி

உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்

பலமா முனிவர் நனிவாடப்

பாவி யேனைப் பணிகொண்டாய்

மலமாக் குரம்பை யிதுமாய்க்க

மாட்டேன் மணியே உனைக்காண்பான்

என்கொண் டெழுகேன் எம்மானே”.

அலவா நிற்கும் அன்பிலேன்

என்னுத்

திருவாசகச்செம்பொருள்

வாக்கால் நிலை

பெறுத்தப்படுதல் காண்க. இவ்வாற்றற் கதையின் உதவி வேண்டாது பாட்டுத்தானே உளம் உருக்கும் பெற்றித் தாதல் தெளியப்பட்டதாகலானும், பாட்டினுதவி கொண்டே கதை சுவை பெற நடக்கு மல்லது கதை தானே சுவை விளையாதா கலானும் கதையே பாட்டினைச் சுவைக்கச் செய்யுமென் பாருரை போலியாமென மறுக்க:-

பிற

அற்றேலஃதாக, மனம் நெகிழ்த்துந்தகைமை கலைகளுக்கு வாயாது, 'பாட்டு' ஒன்றற்கு மட்டுமே வாய்ப்ப தென்னையோவெனின்; பாட்டியற்றும் நல்லிசைப் புலவன் தன் மனம் நெகிழ்ந்து பதப்பட்டு நின்ற நிலையிற் பாடுவதே பாட்டாகலின், அப்பாட்டின்கண் அவன் மன நிலை பிரதிபலனமாய்த் தோன்றி அதனைப் பயில்வார் எல்லார்க்கும் அதே மனநிலையினைத் தோற்றுவிக்கும் என்க. அஃதாயின் வானநூல் முதலிய பிறகலைகளை ஆயும் வழியும் ஒரோவொரு கால் அதுபோன்ற உள நெகிழ்ச்சி தோன்றுதலுண்டா லெனின்:-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/282&oldid=1579544" இலிருந்து மீள்விக்கப்பட்டது