உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மறைமலையம் - 9

நன்று கடாயினாய், வானநூல் ஆய்வானெருவன் வானிற் கோள்களின் நிலையை உற்றுணர்ந்து அவற்றின் அமைதியை வியந்து மகிழுங் காலத்துத் தன்னுளம் மென்பதப்பட்டு உருகிமேலெழுந்து வழிய வழிந்த அந்நற்சொற்களை அவன் ஆண்டெழுது மாகலின் நூல்களின்கண் ஒரோவொரு பகுதி அங்ஙனம் பயில்வார்க்கு மனம் மென்மை பயப்பதாயிற்றென்க. யாண்டு யாண்டு மனம் மென்பதம் எய்தக்காண்டுமோ ஆண்டெல்லாம் பாட்டுண்டென்றே துணியப்படும். 'பாட்டு’ என்பது செய்யுள் ஒன்றின் மட்டுமே நிகழப்பெறுவதன்று. அஃது உரையினும் உலகத்தோற்றங் களிலும் உலக நிகழ்ச்சியினு மெல்லாம் காணக்கிடப்ப தொன்றாம். ஆசிரியர் நக்கீரனார், இறையனார் அகப்பொருளுக் குரைத்த உரையை நோக்கு மின்கள்! ஆண்டுப் பாட்டினியல்பு விளங்கிக் கிடத்தல் காண்குவிர்! ஊர்ப்புறத்தில் தனிமையிலமைந்த தேமாம் பொழிலகத்தே இளவேனிலிற் புகுந்து ஆண்டுக் குயில் கூவும் ஓசை கேண்மின்கள்! ஆண்டும் பாட்டுண்டென்பதறிகுவிர்! வானோங்கி விளங்கும் மலைப்புறத்தே சென்று அதன் அடிவாரங்களிற் புன்மேயும் ஆன்மந்தைகளின் கழுத்திற் கட்டிய மணியோசை

L

கேண்மின்கள்! ஆண்டும் பாட்டுண் டன்பதறிகுவிர்! கெழுதகைமைமிக்கு அன்பான் அளவளாய் நும் ஆருயிர் நண்பரோடு வாளாதிருமின்கள்! ஆண்டும் பாட்டுண்டென்பதறிகுவிர்! இருந்தவாற்றால், மனம் நெகிழ்த்தும் பதம் உள்வழியெல்லாம் பாட்டுமுண்டாதல் ஒருதலையென்க.

கலைகளைக்

இனிப் பிறிதொருசாரார், அறிவுதரும் வானநூல் முதலான கற்றலே பயனுடைத்தாமன்றி, மனம் நெகிழப்பண்ணும் பாட்டுக்களைக் கற்றல் வறிதா மென்பர்; அவரும் அறியார், என்னை? அவர் மக்கள் மன நிலையினைப் பகுத்தறியாது கூறினாராகலின் மக்களுயிர் அறிவு நிகழ்தற்கும் அன்பு நிகழ்தற்கும் இடனாயுள்ளது. அறிவை முதிரச்செய்வ தெல்லாம் அவ்வறிவு முதிர்ச்சியிற் றோன்றும் அன்பின் வயமாய் நிற்றற்பொருட்டேயாம். இன்ப உணர்ச்சி யின்னதெனவே அனுபவியாத ஓர் உயிரை எவரேனுங் காட்டவல்லரா? எமக்கு இன்பம் வேண்டாம் அறிவே வேண்டுமெனக் கூறுவரும் அது கூறிய பிற்கணத்தே இன்பத்தை நாடிச் செல்லுதல் கண் கூடா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/283&oldid=1579545" இலிருந்து மீள்விக்கப்பட்டது