உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

யறியப்படுமன்றே? அவர் கூறுமாறு அன்பென்னும் நிலையின்றி அறிவு மட்டுமுடையதோர் ஆன்மா உளதாயின்

“அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றன் மரந்தளிர்த் தற்று”.

251

ன்ப

(குறள் 78)

என்று தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் கூறியாங்கு அது வெறும்பாழாய் ஒழிதல் திண்ணமேயாம். உள்ளம் மென்பதப்படுவ தில்லாதார் எத்துணைப் பெரிய அறிவுடைராயினும் அவர் பிறர்மாட்டு உள்ளன்பு பாராட்ட மாட்டார்; அவர் உலகத்துள்ள உயிர்வருக்கங் எல்லா வற்றையும் வற்றையும் வெறுத்தொழுகிப் புண்பட்டுநிற்பர். அவர் உயிர்வாழ்க்கையிற் பயன் ஒன்றுங் காணார். பிறரோடியை பின்றி நீ;குந் துறவறத்தினும் மக்கள் மனைவியோ டியைபுற்று நின்று வாழ்க்கைசெலுத்தும் இல்லறமே நன்றென்று கடைப்பிடித்து அதனையே முதலில் வைத்துரைத் ததூஉம், அவ்வா றுரைத்தாங்கே தாமும் இல்லறத்தினின்று ஒழுகியதூஉம் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் எக்கருத்துப்பற்றி இல்லறத்தினின்று கன்றினார்க்கு உயிர்மென்பதப்பட்டு

நிற்குமாதலின், அம்பதிறைவன் அருளிற் றோய்ந்து அவ்வய மாய் நிற்றல் இலேசில் எய்துமென்னும் நுட்பம் இனி துணர்ந்தேயாம் இல்லறத்தினும் மகப் பேறுடையார்க் கன்றி ஏனையோர்க்கு அதனாற் பெறும் பயனில்லை யென்பது தோன்ற,

“மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்

நன்கல நன்மக்கட் பேறு,”

(குறள் 60)

“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற,’

(குறள் 61)

“அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்

சிறுகை யளாவிய கூழ்”,

(குறள் 64)

“குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொற் கேளா தவர்."

(குறள் 66)

என்றற்றெடக்கத்தான் வற்புறுத்துக் கூறியதூஉம், மனைவி மாட்டு

நிகழும் அன்பு காமவயப்பட்டே பெரும் பாலும் நிகழுமாகலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/284&oldid=1579546" இலிருந்து மீள்விக்கப்பட்டது