உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் – 9

அதனால் இறைவனருளுருவாய் உள்ளூன்றிய அன்புதோன்றி உயிர்களை மென்பதப் படுத்தமாட்டாதாக, மகப்பெற்றதுணையானே சந்திர னெதிரே கிடந்த நிலாமணி நீர் அரும்புதல் போலத் தன்னுள்ளத்துக் கரந்துகிடந்த அத்தூய அன்பு அங்குரித்துத் தன்னுள்ளத்தைப் பதப்படுத்தும் நீர்மை பற்றியே யாமென்க. இஃதுணர்ந்தே பிற்காலத்துச் சான்றோரும், “பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற் றென்னுடைய ரேனு முடையரோ - வின்னடிசில் புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாம் மக்களையிங் கில்லா தவர்".

என்று இதனை விதந்தெடுத்துக் கூறுவாராயினாரென்க. அது கிடக்க.

னி, அறிவை மட்டும் விளக்கி அன்பினைக் காட்டாத ஏனைக் கலைகளெல்லாவற்றினும், அறிவையும் மிகச்செய்து அன்பாம் இன்பநிலையும் உடன்பயப்பிக்கும் பாட்டு ஒன்றே விழுப்ப முடைத்தாம். காமவெகுளி மயக்கமென்னுங் குற்றம் அணையாதவாறு ஆன்ம மன நிலையைப் பிரித்துக் கொண்டு போய்த் தூய அமிழ்தமயமான இன்ப அன்புருவில் நிறுத்தவல்ல பாட்டே ஏனை எல்லாப் பாட்டுக்களினுஞ் சிறப்புடைத்தாய் நிற்கும். இவ்வகையால் நோக்குழித் ‘திருவள்ளுவர் திருக்குறள்’, 'தேவாரம் திருவாசகங்கள்' முதலான நூல்களினும் மிக்கது இல்லையாதல் தெற்றென விளங்கா நிற்கும்.

உலகியற்பொருள்களைக் கூறும் வழி அவற்றில் இழிபுற்றன வெல்லாம் விலக்கிச் சிறந்தன கூறுதலும், மக்கள் அகவியற் பொருள்களைக் கூறும்வழி அவற்றின் கண் ஒருப்பட்டுத் தோன்றும் காமவெகுளி மயக்கங்களைக் களைந்து அவற்றின்கட் சிறந்த அகவொழுக்கத்தைக் கூறுதலும் பாட்டிற்கு இன்றியமை யாத கடமையாம். எனவே, பாட்டு என்பது தூய்மைப்படுத்துதலே குறியாகக் கொண்டு நடப்பதென அறிதல் வேண்டும். இத்தூய்மைப் படுத்து முறை தழுவாத செய்யுட்கள் எத்துணை அழகு வாய்ப்பச் செயப்படினும், அவை பொருட்பேறுடைய வென்று புலனழுக்கற்ற அறிவாளரால் நன்குமதிக்கப்படா.பிற்றை ஞான்றைப் புலவரிற் பெரும்பாலார் பண்டைக் காலத்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/285&oldid=1579547" இலிருந்து மீள்விக்கப்பட்டது