உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மறைமலையம் - 9

13 - 26: முத்தினும்

தேம்பும்

தலைமகள் தானே தன் காதல் நினைவைத் தாய்க்கு அறிவிக்க விரும்பினாள் என்கின்றாள்.

முத்தினாலும் இரத்தினத்தினாலும் பொன்னினாலும் அவ்வளவு பொருத்தமுறச் சமைத்த அணிகலங் கெட்டொழிந்தால் பின்னும் வந்து கூடினுங் கூடும்; தத்தங் குடிக்குரிய குண நிறைவும் மேம்பாடும் இயற்கை ஒழுக்கமுந் தம் பழந்தகைமை குறைந்தால் அக்குறைவால் உண்டாகும் இழுக்கைப் போம்படி கழுவி முன்போல் விளங்கு புகழுடைய வாக நிலைபெறச் செய்யும். அத்தன்மை தொல்லை மலம் அறத் தெளிந்த முனிவர்களுக்கும் எளிய காரியமாகாதென்று

அடிப்பட்ட சான்றோர் கூறுவர். தாய் தந்தையர் இன்னார்க்குக் கொடுப்பமென்றிருந்த விருப்பமும் அவரது அறியாமையும் ஒருங்கே ஒழிய நீண்ட தேரினையுடைய தலைவன் தந்தையால் நிறுத்தப்பட்ட அரிய காவலையுங் கடந்து நாங்கள் இருவேமு மாய் இதுவே நன்றென ஆராய்ந்து தழுவிய காந்தருவமணம் இத்தன்மைத்தாயிருந்ததென்று நாம் தாய்க்கு அறிவுறுத் தலினால் வரக்கடவதொரு குற்றமும் உண்டோ? இங்ஙனம் நாம் உண்மைகூறி நின்ற விடத்து நம் தலைவனுக்கே என்னைக் காடுக்கும் அறநெறியில் அவர் இசைந்து வாராராயினும், நம் உயிர் போந் துணையும் இத்துயரை ஆற்றிக் கொண்டிருப்ப மாயின் இனி வரக்கடவ தாகிய மறுமையுலகத்தேனும் நமக்கு நந்தலைவனைக் கூடுதலுண்டாமென்று மான்போன்ற தன் கண்கள் கலங்குதல் அடையச் செயலற்று ஒழியாத் துன்பே நுகர்வாளாய் என் தலைவி மெலிகின்றாள் என்க.

27- 34: இகன்மீக்

தீமோ

தோழி தன் தலைமகள் தனக்கியைந்த காதலனைக் கூடினாள் என்று அறிவிக்கின்றாள்;

ஒருவர் ஒருவர்மேல் மாறுபாடுற்று அதனையே மிகுதியும் நடத்துகின்ற இரண்டு பெரிய வேந்தர்க்கு நடுவே அவரைப் பொருத்துவிக்குந் தொழிலில் நின்ற அறிவாளரைப்போல அவளது நோய்க்கும் நினது சினத்திற்கும் அஞ்சும் இரண்டு பெரிய அச்சங்களுடையே னாய் யானும் ஆற்றலாகாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/287&oldid=1579553" இலிருந்து மீள்விக்கப்பட்டது