உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

6

255

துன்பமுறுகின்றேன்; கொடுத்த பின்பு எவ்வாற்றானும் நன்றே விளையுமென்பதும், இரண்டு குடியும் ஒக்குமென்பதும், குடியின் குணமும், சுற்றத்தார் உதவியும் இசைவித்துப் பார்த்துப் பின்னரும் பலருடனே சூழ்ந்து செய்யாது யாங்களே தனியாய்த் துணிபுற்றுச் செய்த தொன்றாயினும் என் தலைவியுயிர்க்குப் பாதுகாவலாய் அமைந்த பெறுதற்கரிய இவ் யாழோர் மணம் நேர்ந்தவகையை நீ நன்குணரற்பொருட்டுச் சொல்லுதற்கு அமைந்தேன், அது பற்றி நீ சினவா திருத்தல் வேண்டும்.

35 - 39: நெற்கொள்

விடுத்தலில்

செவிலித்தாய் தம்மைத் தினைப்புனங்காக்க விடுத்தமை

கூறுகின்றாள்:

L

நெல்லையுடைய நீண்ட மூங்கிலில் அந் நெல்லைப் பறித்துத் தின்றற்குத் தனது புழைக்கையை மேற்றூக்கி நின்று வருந்தின யானையானது அங்ஙனம் மேலெடுத்த தன்கை வருத்தந்தீர முத்துக்கள் நிறைந்த தன் கொம்பிலே தொங்கி விட் அதன் கையைப்போலத் துய்யுள்ள தலை வளைந்து ஈன்றணிமை தீர்ந்த பெருங்கதிர்களாலான நல்ல கொத்துக்களையுடைய சிறிய தினைப்பயிர்களில் வந்துவிழும் பறவைகளை வெருட்டி இங்ஙனந் தினைப்புன காவல் செய்து கதிரவன் மறையும் அந்திப்போதில் இல்லறத்திற்கு வருவீராகவென அன்னாய் நீ எம்மை விடுத்தாய்

என்க.

40 - 106 : கலிகெழு

இருந்தனமாக

அங்ஙனம் விடுக்கப்பட்ட தாம் தினைப்புனங்காத்துப்பின் விளையாடியிருந்தமை தெரிவிக்கின்றாள்.

யாங்களும் அவ்வாறே போய், மனவெழுச்சி மிகுதற்குக் காரணமாக மரத்தின் மேலுச்சியிலே குறவன் இயற்றியதும் புலி கண்டு அஞ்சுவதுமான பரண்மேலேறி அவ்விடத் துள்ளனவாகிய மலைப்பக்கத்துப் பிரப்பங்கொடி யாலே அழகுபெறக் கட்டிய தழலுந் தட்டையுங் குளிரும் பிறவுமாகக் கிளியோட்டுமியல்புடைய கருவிகளை ய முறை முறையே கையிலெடுத்துக் கொண்டு அவற்றை ஓட்டிப் பின் ஞாயிற்றின் வெய்ய கதிர்கள் சுடுதலால் வெம்மை விளங்கும் நண்பகற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/288&oldid=1579555" இலிருந்து மீள்விக்கப்பட்டது