உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் - 9

பொழுதிலே அவ்வெம்மை தாங்க மாட்டாமல் வானத்திற் பறக்கும் புட்களெல்லம் தம்மால் விரும்பப்படுகின்ற இருப்பிடங்களுக்குச் செல்கையினலே, அப்போது யாமுந் தினைப்புனங்காவலை விட்டேம்.

நீர்நிறைந்த பெரிய கடலுங் குறையும்படி அதன் நீரை மொண்டு கொண்டு அகன்ற கரிய வானிலே வீசுகின்ற குளிர்காற்றுத் தம்மேற் கலந்து படுதலினால் முரசு முழங் கினாற் போலும் இனிய குரலினையுடைய இடியேற்றுடனே கூடி வரிசையாய்ச் செல்லும் உயரத்தினவான முகில் களானவை ஆவியாய் நின்ற தந்தன்மை நீராய்த் திரிவுபட்டு, இனிய ஓசையினைத் தரும் முரசத்தினையும் கதிர் விளங்கும் அணிகலன்களையும் உடைய முருகக் கடவுள் பகைவராகிய அரக்கரைக் கொல்லற் பொருட்டுக் கையிலெடுத்ததும் விளங்கும் இலைவடிவினது மான வேற்படை பிறழ்ந்தாற் போலும் மின்னல் கலந்த தொகுதியினை யுடையவாய், அப்போது மலைமேல் நீரைப் பொழிந்தன.

அங்ஙனம் அம்முகில்கள் நீரைப் பொழிந்த அளவிலே, எந் தலைமகனுக்குரித்தாகிய நீண்ட மலைமுகட்டினின்றும் கீழ் இறங்கிவருந் தெளிந்த நீரினை உடைத்தாய், விளங்கும் வெள்ளிய ஆடையினை ஒக்கும் அழகிய வெள்ளிய அருவியில்

நீங்குதலில்லாத விருப்பத்தினை யுடையேமாய் ஒழியாமல் விளையாடியும் பின் பளிங்ககைக் கரைத்துச் சொரிந்தாற் போல்வதானே அகன்ற சுனையில் முழுகி விளையாடு மிடத்துக் குளிர்மிகுகின்ற மலைப்பக்கத்தில் எமக்கு விருப்பமான பாட்டைப் பாடியும் பொற்றகட்டிலே அழுத்தின நீலமணிபோலச் சிறிய முதுகில் தாழ்ந்துகிடந்த எமது பின்னிய கருங்கூந்தலை நீர்போகப் பிழிந்து ஈரம் அறத் துவர்த்தி உள்ளிடம் எல்லாம் சிவப்படைந்த விழிகளுடையே மாய் ஒள்ளிய செங்காந்தட்பூமுதல் வேங்கைப்பூ இறுதியாக வுள்ள மலர்களையும் பிற பிற மலர்களையும் சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற புனமுறுங்கைப்பூவோடு ஒருங்கு சேர்த்து, அப்பூக்களின் மணத்தால் மயக்கமுடையே மாய் அவற்றைப் பறித்தலில் வேட்கைப் பெருக்குற்றுத் திரிந்து பறித்து முகிலால் தன்னிடங் கழுவப்பட்ட அகன்ற கற்பாறையிலே அவை தம்மையெல்லாங் குவித்தும் நிறைந்த புள்ளொலிகளான வாச்சியங்களையுடைய குறுக்கிட்டுக்

L

அங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/289&oldid=1579558" இலிருந்து மீள்விக்கப்பட்டது