உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

257

கிடக்கும் எதிரொலி மலையினிடத்தும் இசைவளப்பத் தோடு சொல்லப்படும் தெளிந்த பாட்டை நடுநடுவே பாடிப் பழகியுங் கிளிகளை ஓட்டியும், அம்மலர்களிலுள்ள புறவிதழைக் கிள்ளியெறிந்தும், பாம்பின் படம் போல் விரிந்த நிதம்பத்திலே கொய்து சமம் பெறத் தொடுத்த தழையை உடுத்தும் பலவேறு நிறத்தினையுடைய அழகமைந்த மாலைகளை எமது மெல்லிய கரிய முடியிலே எழில் பெறக் கட்டியும் தீப்போல் விளங்கும் செந்நிறத்தினையுடைய அழகான தளிர்கள் நிரம்பிய அசோகமரத்தினது பூந்துகள் சிந்தும் குளிர்ந்த நீழலிலே இருந்தேம்:-

107 - 115: எண்ணெய்

வெண்போழ்க்கண்ணி

அசோக நீழலிலிருந்த தம்மெதிரே அழகும் ஆண்மை யுஞ்சிறந்த ஓரிளைஞன் வந்தனானகத் தோழி கூறுகின்றாள்:

பலகாலும் எண்ணெய் பூசுதலாலே கடை குழன்று வளர்தலை உடையதாக இருக்க, நன்மணங் கமழுஞ் சந்தனக் கட்டையை அரைத்தெடுத்த குளிர்ந்து நறியதான மயிர்ச் சந்தனத்தை மணக்கப்பூச்சி, அதனாலுண்டான ஈரம் புலரும்படி விரலை உள்ளே செலுத்திக் கோதி அவிழ்த்து வைரமேறின அகிற்சட்டை புகைத்த அழகிய புகையை ஊட்டி, யாழினிசை போலும் அழகுமிகும் பாட்டைப் பாடுவதாகிய ஞிமிறு வண்டு ஒலிசெய்ய அகில் நெய்யையும் உடன் கலந்து தடவி அதனால் நீலமணியின் நிறத்தைக் கொண்டதான தனது கரிய பெரிய தலை மயிரிலே மலையிலுள்ளனவும் நிலத்திலுள்ளனவும் கொம்புகளிற் பூத்தனவும் சுனைகளின் மலர்ந்தனவுமாகிய பலநிறப்பட்ட பல திறப்பட்ட மலர்களை ஆய்ந்து கலந்து தொடுத்த.......

L

இ னிப், புறத்தே தோன்றும் புறப்பொருளும் மக்கள் மனத்தே தோன்றும் அகப்பொருளும் விராய்க்கூறும் பாட்டுக்களில் ஒரு பாலன புறப்பொருளே மிகுதியுங் கூறி அகப்பொருளைச் சுருக்கிக் கூறும்; பிறிதொருபாலன அகப்பொருளே பெரிதுங் கூறிப் புறப்பொருளைச் சுருக்கிக் காட்டும்; வேறொருபாலன புறப்பொருள் அகப்பொரு ளிரண்டும் சமனொக்க வைத்துக்காட்டும். பட்டினப்பாலை போல்வன புறப்பொருளே மிகுதியுங்கொண்டு அகப்பொருளைச் சிறிதே குறிப்பனவாம்; இக்குறிஞ்சிப்பாட்டை யொப்பன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/290&oldid=1579559" இலிருந்து மீள்விக்கப்பட்டது