உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

  • மறைமலையம் – 9

அகப்பொருளே மிகவுஞ்சொல்லிப் புறப்பொருளைக் குறையவே கூறுவனனவாம்; முல்லைப்பாட்டுப் போல்வன அவையிரண்டுஞ் சமம்பெறக் கொண்டு வருவனவாம் என்க.

இனி, க்குறிஞ்சிப்பாட்டினை ஆசிரியர்

கபிலர் ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழின் அருமை பெருமை புலப்படுத்தல் வேண்டி இயற்றினாராகலின், இதன்கட் கூறப்பட்ட தன்கட்கூறப்பட்ட பொருட்டொகுப்பும் நுட்பமும் வளப்பமும் எல்லாம் ஆரியம் வல்லார் ஒருசிறிதும் அறியாதனவா மென்பதூஉம் அவை செந்தமிழ் மொழிக்குச் சிறந்தனவா மென்பதூஉம் அறியற்பாலன. புறத்தே ஐம்பொறிக்குப் புலனாம் உலகத்தை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்டிணையென எழுகூறாகப் பகுத்தும், அகத்தே உயிருணர்வுக்குமாத்திரம் புலனாம் அகவுலகத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணையென வேறு எழுகூறாகப் பகுத்தும் ஆராய்ந்து அறிவுறுத்தும் முறை தொன்று தொட்டுத் தமிழ் மக்கள் நன்னாகரிகத்தின் மாத்திரமே காணப்படுவதாயிற்று. ஏனை ஆரியர் இத்துணை நுண்ணிய பொருளாராய்ச்சியைச் சிறிதும் உணர்ந்திலர். இப்பெற்றிப் பட்ட தமிழ்ப் பொருணுக்கம் பிரகத்தனுக்கு அறிவுறுக்கப்புகுந்த ஆசிரியர், மக்கள் அறிவும் இன்பமும் புறவுலகத்தோடு ஒருமையுற்று நிற்குமாற்றல் பரிசுத்தம் பெற்று மென்பதம் உறுதலை இப்பாட்டின்கண் வந்துழி வந்துழிக் கூறி, அவையிரண்டும் அதனினுஞ் சிறந்த அகவுலகின் இயல்பறியுமாற்றல் பரிசுத்தம் பெரிதடைந்து திகழ்ந்திடும் வகையினையே இப்பாட்டிற்கு உரிய பொருளாய் வைத்துரைத்திருக்கின்றார். இப்பாட்டின் கட் கூறுதற்கு முதன்மையாய் எடுத்த அகப்பொருட்டுறை இடையிடையே பதினான்கிடத்து நின்று நின்று போய் முடிவு பெறுகின்றது; இங்ஙனம் இடையிடையே நின்றுபோ மிடங்களே பாட்டின் முதன்மைப்பொருளோடு இயைத்துச் சொல்லுதற்கிசைந்த பிறபொருள்களைக் கொண்டுவந்து பொருத்து மிடமாம். இப் 'பொருத்து வாய்' இயல்பினை முல்லைப் பாட்டாராய்ச்சி, பட்டினப்பாலை யாராய்ச்சியில் விரித்துரை கூறினாம். ஆண்டுக்

காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/291&oldid=1579560" இலிருந்து மீள்விக்கப்பட்டது