உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

259

இனி, ஆசிரியர் இப்பதினான்கு பொருத்துவாய் களினும் தாம் கூறும் அகப் பொருளோடு ஒருப்படுத்துச் சொல்லுதற்குரிய பொருளைக்கொண்டுவந் திணைக்குமாறு பெரிதும் வியக்கற்பாலதாம். இப்பதினான்கு பொருத்து வாய்ப்பகுப்பும் முன்னே பொருட் பாகுபாட்டின்கட்டெளித்துரை கூறப்படும்.

இனி,அப்பொருத்துவாய் பதினான்கினும் முறை முறையே கருக்கொண்டு செல்லும் இப்பாட்டின் முதன்மைப் பொருள் யாதோ வெனிற் கூறுதும்.

குறிஞ்சி என்னும் மலைநாட்டிற்கு உரிய காவலனான ஒரு கட்டிளைஞன் தான் வேட்டமாடுதல் குறித்துப் பல் வேலிளைஞரை யொப்பப் பல வேட்டை நாய்கள் தன்னைப் புடைசூழ்ந்துவரப் பிறிதொரு மலைப்பாங்கரிலே வந்தான். அம்மலைப்பாங்கருக் குரியான் மகளான ஓரழகியமங்கையும் அவடன் தோழியும் தஞ்செவிலித்தாயாரால் ஏவப்பட்டு ஆங்குள்ள தினைப்புனத்தைக் காவல் செய்தபின்னர், அவரிருவரும் ஆங்குள்ள சுனைநீரிலே விளையாடிப் பல பூக்களைத் திரட்டிக்குவித்து ஒரு சோகமரநீழலிலே வந்து அமர்ந்திருந்தார். இவரிங்ஙனமிருப்ப முன் வேட்ட மாடுதற்பொருட்டு இம்மலைப்பாங்கரில்வந்த அக்கட்டிளைஞன் தான் வேட்டங்கொண்டு துரத்திய சில விளங் கினங்களைப் பின்பற்றியோடிவராநிற்ப, அவை எவ்வாறோ இவனைத்தப்பிப் போய்விட்டன. பின்னர் அவன் அவற்றைத் தேடிக்கொண்டு அங்கு வந்து அவற்றைக் காணானாய் அசோகமரநீழலில் அவ்வழகிய மங்கையும் அவள் தோழியுமிருப்பக் கண்டான். *கண்டு அவர் தம்மிடத்தே அணுகி, 'இங்கு யான் யான் சில விலங்குகளை வேட்டமாடி இழந்தேன்; மெல்லியலீர்! அவைதாம் இங்கு வரக் கண்டீரேற் சொல்லுமின்! என்று வினாவினான். அவர்கள் அதற்கு விடைபுகலாது வாளா திருப்பக் கண்டு ‘நங்கைமீர், நீவிர் அது சொல்லீராயினும் என்னோடு சில சொற்பேசுதலும் நுமக்கு இழுக்காமோ?" என்று கூறி அவர் விடைகூறுங் கூறுங் காலம் பார்த்துநின்றான். இங்ஙனம் இவர்கள் இருக்க, ஆண்டுள்ள தினைப்புனத்துப் பயிர்களை யழிக்கும் ஒரு பேரியானை அடித்துத் துரத்த அஃது

66

வேட்டுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/292&oldid=1579562" இலிருந்து மீள்விக்கப்பட்டது