உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

261

இங்ஙனம் நிகழ்ந்த காதற்கிழமையின் வரலாற்றை நடந்தவாறே எடுத்துத் தோழி தாய்க்கு அறிவுறுத்து தலைப் பழைய தமிழாசிரியர் ‘அறத்தொடுநிற்றல்' என்பர். தலைமகன் தலை மகளுக்கு இடைநிகழ்ந்த இக்காதற் களவொழுக்கம் அறவொழுக்கமாயவாறு யாங்ஙன மெனின்; அவ்வொழுக்கம் தாயறிவினோடும், தலைமகள் பெருமை யோடும் தலைமகள் கற்பினோடும் தோழி தனது காவலோடும், தலைமகள் நாணினோடும், உலகவொழுக்கத் தோடும் மாறுகொள்ளாது தெய்வத்தான் நிகழ்ந்த தாகலின் என்க. அஃதெங்ஙன மெனின்; தாய் தானே ‘தினைப் புனங்காத்து வருக' என்று இவரை னமையின் தாயறி வோடு மாறுகொள்ளாதாயிற்று; தம்மைக் கால்ல வந்த யானையை ஓட்டி இவரைக் காத்த தன்றலைமகன் நன்றியை நினைத்து அவனோடு ஒருப்பட்டமையின் அது தலைமகள் பெருமையோடு மாறுகொள்ளாதாயிற்று:

தன்றலைமகன் வரும் வழி ஏதங்கள் பலவுமுடைத்தாகலின் அவனுக்கு ஏதாமோ என நினைந்து மெலிந்தமையின் அஃதவள் கற்பொழுக்கத்தோடு மாறுபடாதாயிற்று; தோழியும் உடனிருந்தகாலத்தே இங்ஙனம் இது நிகழ்ந்த தாகலின் இஃதவள் காவலொடு மாறுகொள்ளாதாயிற்று; யானைகண்ட அச்சத்தால் தலைமகள் தன் நாண்மறந்து தலைமகனைச் சேர்ந்து நின்றமையின் அஃது அவள் நாணினொடு மாறுகொள்ளா தாயிற்று; தம்மைப் பாதுகாத்தார்க்கே மகளிர் உரியர் என்பது தோன்ற 'உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர், கொண்டாற்குரியார் கொடுத்தார்' என்பவாகலின் அஃதுலக வியலோடு மாறுகொள்ளா தாயிற்று. இங்ஙனம் ஒருவாற்றானும் ஒருவர் மேலும் வழுக்கின்றி நடந்த அக்காதற்கிழமை,

66

வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வானுகத்தின்

றுளைவழி நேர்கழீ கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக் கிளைவயினீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த விளைவையல் லால்விய வேன்நய வேன்றெய்வ மிக்கனவே”.

என்று சொலப்பட்டவாறு தெய்வம் இடைநின்று பொருத்த நேர்ந்ததொன்றமாகலின் அதனை அறவொழுக்கமென்றும், அவ்வொழுக்கம் நடந்த முறையை அறிவித்தல் அறத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/294&oldid=1579567" இலிருந்து மீள்விக்கப்பட்டது