உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் – 9

நிற்றலென்றும் ஆசிரியர் தொல்காப்பியனாரை யுள்ளிட்ட சான்றேரால் அது வகுக்கப்பட்டதென்க.

இனி, இத்தலைமகன் றலைமகள் புணர்ந்த புணர்ச்சிக்கு ஏதுவாய் நின்றது, ஒரு களிற்றியானையாதல் பற்றி இதனைக் 'களிறுதரு புணர்ச்சி' என்று வழங்குப. இன்னும் இவ்வாறே 'பூத்தரு புணர்ச்சி’, ‘புனறரு புணர்ச்சி' என்பனவும் உள. அவற்றின் விரிவெல்லாம் தொல்காப்பியம், றையனார் களவியல் நக்கீரனாருரை, திருச்சிற்றம்பலக் கோவையாருரை முதலியவற்றிற்

காண்க.

முற்கூறியவெல்லாம் ஒக்குமன்னாயினும், ‘பாட்டு' என்பது மக்களுயிர்க்குரிய முக்குற்றமான காமவெகுளி மயக்கங்களைக் களைவதென மேலெல்லாங் கூறிவைத்து, ஈண்டு இப்பாட்டுக் காமவொழுக்கத்தின் மேற்றாய் வந்த தென்றுரைத்தல் முன்னோடு பின் மலைவாய் முடியுமாலோ வெனின்:-முடியாது. காமம், காதல் என்னுஞ் சொற்பொருள் வேறுபாடு சிறிதாயினும் அறியப்படின் அது குற்றமாத லில்லையென்பது இனிது விளங்கும். என்பது

அது காட்டுதும்; காமம்

உயிரோடொருமித்து நிற்கும் மலவயத்தாற் றோன்றுவது; காதல் என்பது உயிரின் உள்ளொளியாய் வயங்கும் அன்பின் வயத்தாற் றோன்றுவதாகும். மலவயத்தாற் றோன்றும் காமம் பிறிதோருடம் போடு இயைந்து இன்பம் நுகர்தற்பயத்ததாம் விழைவினை விரைவிற்றோற்றி விரைந்து அழிவெய்தும்; அன்பு வயத் தாற் றோன்றும் காதல் பிறிதோருயிரின்கண் உள்ளொளியாய் அசையும் அன்பினோடியைந்து நிற்றற்பயத்ததாம் பெரு வேட்கையினைத் தோற்றி “ஊழிபெயரினும் தான் பெயராது பேரின்ப வுருவாய் நிலைபெறும்”. ஒருத்திமேற் காமுற்றா னொருவனும் ஒருத்திமேற் காதலுற்றான் ஒருவனும் எப்பெற்றியராயிருப்பரெனத் தெளியவறியின் இதனுண்மை இனிது புலப்படும். ஒருத்திமேற் காமங்கொண்டான் ஒருவன் அவளைப் புணர்ந்து இன்பநுகர்ந் தொழிதலையே குறிப்பாய்க் காண்டொழுகுவான். அவ்வின்பம் நுகர்தற்பொருட்டு வேண்டப்படும் வினைகளெல்லாம் விரைவிற் செய்து அவளைக் கூடியபின் அவ்வளவோடு அவள்மேற் பற்றறுந்து, பிறளொருத்தியையும் அங்ஙனமே விழைந்து ஒரு வரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/295&oldid=1579570" இலிருந்து மீள்விக்கப்பட்டது