உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

னி

263

துறையின்றிப் போவன். இனி ஒருத்திமேற் காதல்கொண்ட ஆண்மகனோ அவள் உயிர் உள்ளொளி யான அன்பு தன் உள்ளொளியுணர்வோடு இயைபுற்றலையே பெரிதும் விழைந்து உடம் போடுண்டாம் புணர்ச்சியை ஏனையோன்போல் விழையானாய், அவளே தானாய் உருகி அவளைக் காணினுங் காணவிடினும் அவள் தேமொழியைக் கேட்பினுங் கேளா விடினும் அவளைப் புணரினும் புணரா விடினும் என்றும் ஒருபெற்றிப் பட்ட வேட்கையுடை யோனாய் அவளுணர் வெல்லாந் தன்னுணர்வாய் அவளுயிரெல்லாந் தன்னுயிராய்க் கொண்டுநிற்கும். அவள் தன் எதிரே யிருப்பின், காமங் கொண்டோன் போல் மேல்விழுந்துபற்றி விரைவிற் புணர்தலைச் செய்யாது தான் மிக மன அமைதியுற்று இருந்து அவளை விழியால் விழுங்கி மனத்தாற் பிணித்து அவளுயிரைத் தன்னுயிராக ஒன்றுறுத்திப் பேரின்ப நிலையில் வைகுவான். இங்ஙனம் இவர் தமக்குள் நிகழுங் காதலின் உண்மை நிலையை மாணக்கர் இனிதுணர்ந்து கோடற் பொருட்டே நற்றமிழ்த் தெய்வமான இறையனார், 'தானே யவளே தமியர் காணக், காமல் புணர்ச்சி இருவயினொத்தல்', என்றருளிச் செய்ததூஉம், ஆசிரியர் நக்கீரனார் இவர்தம்மை, "ஓராவிற் கிருகோடு தோன்றினாற்போல,” என்றுவமையில் வைத்துக் கூறியதூஉம், மாணிக்கவாசக அடிகள்,

“காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம் ஏகத் தொருவ னிரும்மொழி லம்பல வன்மலையில்

தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்ப துன்பங்களே”

என்றருளிச் செய்ததூஉம் என்க.

இப்பெற்றித்தாகிய

பத்தோடொப்பதாகலின்,

காதலொழுக்கம் இறைவனரு

ளொளியோ டொன்றுபட்டு வரைவின்றி நுகரும் பேரின்

அறிவுடையோர் கூறுவாராயினர்.

தனை மிகப் பாராட்டி

இனி, இம்மக்கட்பிறவியின்கண் நுகரப்படுமின்பங் கட்கெல்லாம் அப்பாற்பட்டுக் கடவுட்பேரின்பவெல்லைக் கண் நிற்பதாகலின், ஆசிரியர் கபிலர், அதனை இக்குறிஞ்சிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/296&oldid=1579573" இலிருந்து மீள்விக்கப்பட்டது