உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் – 9

பாட்டின்கட் கூறுவாராயினர். இப்பாட்டின்கட் கூறப்பட்டது வெறுங் காமப்பொருளென்று கொள்ளற்க. அஃதெற்றாற் பெறுதுமெனின்:- இப்பாட்டின்கட் கூறப்பட்ட தலைமகன் உள்ளச்சிறப்பைத் தோழி கூறுகின்றுழி,

66

.....அதற்கொண்

டன்றை அன்ன விருப்போ டென்றும், இரவரன் மாலைய னேவரு தோறுங் காவலர் கடுகினுங் கதநாய் குரைப்பினும் நீதுயிலொழியினும் நிலவுவெளிப் படினும் வேய்புரை மென்றே ளின்றுயிலென்றும் பெறாஅன் பெயரினும் முனிய லுறாஅன் இளமையினிகந்தன்று மிலனே வளமையிற் றன்னிலை தீர்ந்தன்று மிலனே'

و,

(வரிகள் 237-245)

என்று வைத்து அவன் காதலுள்ள மாட்சி வகுத்துக் கூறிய வாற்றனே நன்கு பெறப்படு மென்பது. இனிக் காமங் கொண்டோர் அக்காமவிழைவை நிரப்புதற் பொருட்டுத் தீது பலவும் புரிந்து தமக்கும் பிறர்க்கும் பயனின்றி வாளா கழிந்து ஒழிவர்.

இனிக், காதல் கொண்டாரோ தம்மாற் காதலிக்கப் பட்டாரோடு ஒருப்பட்டு நின்று தமக்கும் உலகுக்கும் நன்றே இயற்றுவர். அஃது இப்பாட்டின்கட்டலைமகன் தலைமகளைத் தேற்றும்,

“சாறயர்ந் தன்ன மிடாஅச் சொன்றி

வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப மலரத் திறந்த வாயில் பலருணப்

பைந்நிண மொழுகிய நெய்ம்மலி யடிசில்

வசையில் வான்றுணைப் புரையோர் கடும்பொடு

விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை

நின்னோ டுண்டலும் புரைவ தென்றாங் கறம்புணை யாகத் தேற்றி”

என்னும் பகுதியால் இனிதுணரப்படும்.

(வரிகள் 201 -208)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/297&oldid=1579577" இலிருந்து மீள்விக்கப்பட்டது