உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

265

இனிக், காமம் தன்னையுடையானுள்ளத்துத் தீய நினைவுகள் பலவும் விளைத்து அவனொழுக்கத்தைத் திரிபடையச் செய்யும். காதலோ அவனுள்ளத்து முன் சிறிதாயினு மிருந்த காம வெகுளிமயக்கங்களை வேரோடு அகழ்ந்து போக்கி நல்லறிவு நற்குணங்களை ஆழஊன்றும்.அது தலைமகள் தன்காதலனிடத்துத் தான் உரிமை கொண்டொழுகியவாற்றை நாம் அறிவிக்கக் கடவேம் என்றதும், அது குற்றமாகாது நன்றேயாமென எண்ணியதும், அங்ஙனம் அறிவித்தபின்னரும் நந்தாய் தந்தையர் நமதொழுக்கத்துக்கு உடம்பட்டு நந்தலைவனுக்கு நம்மைக் கொடுக்க நேர்ந்திலராயின் நாம் உயிர் துறந்தபின்னாவது நந்தலைவனை மறுமையுலகிற் கூடிவைகுவே மென்றதும் அவடனக்குக் காமவெகுளி மயக்க வியைபு அறுந்து போனமை நன்கு தெரிக்கலுறும். அது,

கு

“முகத்தினும் மணியினும் பொன்னினு மத்துணை

நேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ் சால்பும் வியப்பு மியல்புங் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி யையர்க்கு மந்நிலை எளிய வென்னார் தொன்மருங் கறிஞர் மாதரு மடனு மோராங்குத் தணப்ப நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி இருவே மாய்ந்த மன்ற லிதுவென நாமறி வுறாலிற் பழியு முண்டோ ஆற்றின் வாரா ராயினு மாற்ற

ஏனை யுலகத்து மியைவதா னமக்கென

وو

என்னும் இப்பாட்டின் பகுதியாற் பெறப்பட்டது.

(வரிகள் 13 -24)

அற்றேல், காமம் காதல்போலப் பேரின்பம் பயவாதா யினும் அது சிறிதாயினும் இன்பம் நல்குதலென்னை, அவ் வாற்றல் அது காதலோடொப்பச் செல்லுமாம் பிற வெனின்:- அறியாது கடாயினாய், உயிர் சிவத்துள் நின்றுழிப்போல மலத்துள் நின்றுழியும் இன்பமெய்தும்; அஃதொருவன் கேவலதுரியா தீதத்தில் மலவயப்பட்டுக் கிடந்து அயர்ந்துறங்கி விழித்தெழுந்த பின் யான் நன்றாய்த் தூங்கினேனெனக் கூறுதலால் பெறப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/298&oldid=1579580" இலிருந்து மீள்விக்கப்பட்டது