உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

மறைமலையம் - 9

இனி, ஒருவர் திருவாசகத்தைப் படிக்கும்பொழுது தன்னுணர்வற்று அறிவுகரைந்து அருளிற் நோய்ந்து கண்ணீரொழுகப் பெரியதோ ரின்பெய்தி நின் மலதுரியா தீதமுற்று அதனைப் பிரிந்து வந்தபின் ஆ இதன் நிலை என்னென்பேன்! எம்பெருமான் திருவருளொளி யிலிங்ஙனமே என்றும் யான் நின்பேனோ என்றுரைக்குங்ாற் சிவத்துள் நின்றவழி இன்பம் எழுதலும் பெறப்படும். இங்ஙனம் இருவகை நிலையினும் இன்பமெழுதல் பற்றி மலநிலையுஞ் சிவநிலையும் ஒன்றெனக் கொள்ளப்படுமோ? அவ்வாறது கொள்ளப்படுமாயின் மின்மினியும் ஞாயிற்று னொளியும் ஒன்றெனக் கூறுதலும் வாய்வதா மன்றோ? மேலும் மலத்துள் உறங்கி இன்புறுவதெல்லாம் பின்னாளில் விழித்தெழுந்து உலகப் பெருங்கவலைச் சேற்றிற் புரண்டு வரம்புகடந்த துன்பமெய்துதற்கேயாம். சிவத்துள் உறங்கி இன்புறுவதெல்லாம் பின்னிவ்வுலகிடைப்பட்டு அதனோ டுண்டாம் பற்றைத் துவரக்கழித்து அச்சிவத்தின்பாலே என்றும் நிலைபெறலை ஊக்குதற் பொருட்டாம். ஆதலால் இத்திறத்துள் வைத்து நன்றெனத் தழுவப்படும் காதலின்பத் தோடு காம இன்பம் சமமென வைத்துக் கூறுதல் பெரியதோரிழுக்காமென மறுக்க.

இங்ஙனம் நன்றின்பா லுய்ப்பதாம் விழுமிய காதற் குறிஞ்சியொழுக்கத்தினைப் பாட்டினுட்பம் முதிரச் சுவைக்கு மாறு வைத்துப் பிரகத்தனுக்கு ஆசிரியர் அறிவுறுத்த வண்மை ஈண்டு ஒருசிறிது விளக்கப்படலாயிற்று என்க.

அடிக்குறிப்புகள்

1. குறிஞ்சிப் பாட்டிற்கு அடிகளார் எழுதிய ஆராய்ச்சியுரையுள் 115 அடிகட்குரிய உரைகளே கிடைத்துள. எஞ்சியவை கிடைத்தில. எனவே அந்த 115 மூல அடிகள் மட்டுமே ஈண்டுத் தரப்பட்டுள்ளன.

இதன் முன் தொடர்பான பகுதி கிடைக்கப்பெறவில்லை.

2.

3.

இதற்கு மேலுள்ள பகுதியும் கிடைக்கவில்லை.

4.

“கருங்கண் ணனையறி யாமைநின் றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய்

வருங்கண் ணனையவன் டாடும் வளரிள வல்லியன்னீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/299&oldid=1579583" இலிருந்து மீள்விக்கப்பட்டது