உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

பின்னிணைப்பு

குறிஞ்சிப்பாட்டு ஓர் அறிமுகம்

இரா. இளங்குமரனார்

குறிஞ்சிப்பாட்டு - குறிப்பு வரைக.

குறிஞ்சி என்னும் அகத்திணை பற்றிப் பாடிய பாடல் குறிஞ்சிப்பாட்டு எனப்பட்டது. இது பத்துப்பாட்டு வரிசையில் எட்டாவது பாட்டாகும். இதனைப் பாடியவர் கபிலர் என்னும் சங்கச் சான்றோர் ஆவர். இப்பாடல் அகவலால் அமைந்தது; இருநூற்று அறுபத்தோர் அடிகளையுடையது.

இப்பாடல் பாட்டுடைத் தலைவன் யார்?

இப்பாடல் அகப் பொருளே பொருளாகப் பாடப் பட்டதால் பாட்டுடைத் தலைவன் இல்லாமல் அகப்பொருள் தலைவனாகச் சுட்டப்படும் களவித் தலைவனையே தலைவனாகக் கொண்டு எழுந்ததாகும். கிளவித் தலைவன் என்பான் பெயர் சுட்டப்படாதவன். தலைவியும் அவ்வாறே ஆவர். பிறரும் தாய் செவிலி தோழி முதலாகச் சுட்டப்படுதல் அல்லாமல், பெயர் சுட்டப்படாராம்.

குறிஞ்சி அகப்பொருள் பற்றி விளக்கம் வரைக.

குறிஞ்சி என்பது அகத்திணை ஒழுக்கத்தில் முற்பட்டு நிற்பதாம். மலையும் மலைச்சார்ந்த இடமும், கூதிர் யாமப் பொழுதும் முதற்பொருளாகக் கொண்டு அமைவது.

அதன் கருப்பொருள், தெய்வம் உணவு முதலியவை வ பற்றியவைாயம். குறிஞ்சித் தெய்வம் மலைகிழ வோன் எனப்படும் சேயோனாம். உணவு தினை தேன் முதலியவையாம். அதன் பண்ணும் யாழும் பறையும் குறிஞ்சிப்பண், குறிஞ்சி யாழ் குறிஞ்சிப்பறை என்பனவுமாம். குறிஞ்சியின் உரிப்பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/301&oldid=1579588" இலிருந்து மீள்விக்கப்பட்டது