உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

புணர்தலும் புணர்தல் சூழ்நிலைகளுமாம்.

இதனைப் பாடிய புலவர் யார்? சிறுவிளக்கம் தருக.

269

இதனைப் பாடியவர் குறிஞ்சி பாடுதற்கே பிறந்த பிறவி யென நிலைநாட்டிய குறிஞ்சிக் கபிலராம்; பறம்பு மலைக் கோமான் பாரியின் பேரன்பில் ஈடுபட்டு வாழ்ந்து, அவன் வாழ்ந்த காலத்தில் உடனாகி இருந்தும், அவன் பெரும் பெயர் நிலை உற்றக் காலத்தில் மகளிர்க்குச் செய்யும்

அவன்

கடன்

களையும் மேம்படச் செய்து, அவனைப் பிரிந்து வாழ இயலாராய் அவனொடும் சேரக் கனல்புகுந்து கல்லாகிய பெரியருமாம். 'கபில இரட்டை யருள் ஒருவர் அவர். மதுரை சார்ந்த திருவாதவூர், அவர் பிறந்தவூர் என்று பின்னூல்களில் சுட்டப்படுகின்றது.

பரணர்' எனச் சான்றோரால் புகழப்பட்ட

கபிலர் பாடிய பாடல்களாக அறியப்படுவன எவை?

சங்கச் சான்றோர் தமிழ்க் கொடையுள் முற்பட்டு நிற்பவர் கபிலரே ஆவர். அவர் பாடியனவாக அறியப்படுவன வருமாறு; பத்துப்பாட்டுள் குறிஞ்சிப்பாட்டு அவர் பாடியது. நற்றிணை (20), குறுந்தொகை (29), ஐங்குறுநூறு (100), பதிற்றுப்பத்து (10), கலித்தொகை (29), அகநானூறு (17), புறநானூறு (30), என்பவற்றுள் அவர் பாடியனவாக 235 பாடல்கள் கிடைத்துள. தொகை நூல்களுள் பரிபாடல் ஒன்று நீங்கிய ஏழிலும் அவர் பாடல்கள் இடம் பெற்றுள. தனிப்பாடல்கள் சிலவும் அவர் பெயரால் உண்டு. இன்னா நாற்பதும் பிறவும் பாடியவர் பிறிதொரு கபிலர் ஆகலாம்.

கபிலர் குறிஞ்சிப் பாட்டைப் பாடக் காரணமாக இருந்தவன் யாவன்? அவனுக்காக இப்பாட்டை ஏன் பாடினார்.

கபிலர் ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்கு பாடியது இப்பாட்டு. ஆதலால், அவனுக்காகப் பாடினார் என்பதை அறியலாம். அவன் தமிழ் நாட்டவர் வாழ்வியலை அறிவதற்கு விரும்பினான். அதனால், தமிழர் வாழ்வியலாம் அகவாழ்வில் மேம்பட்ட காதற் கற்பு நெறியைப் பாடுதல் வழியாகத் தமிழ் அறிவித்தலே செவ்விய முறை எனத் தேர்ந்து தெளிந்து பாடினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/302&oldid=1579591" இலிருந்து மீள்விக்கப்பட்டது