உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

  • மறைமலையம் - 9

ஏன் காதற் கற்பை விளக்கும் பாடலைப் பாடினார்?

அவன் தமிழ் அறிய விரும்பினான் ஆதலாலும், தமிழ் என்பது தமிழ்மொழி என்னும் அளவில் நில்லாமல் தமிழர் வாழ்வியலையும் சுட்டும் என்பதை உணர்த்தவும்,அவ்வாழ்வியலுள் நனி சிறந்ததாகவும், கற்பு வழி மணமே மணம் என்பதைக் கொண்ட ஆரிய வழியினனாக அவன் இருந்தாலும், அந் நெறியினும் உயர் நெறி காதல் வழியாக ஏற்படும் கற்பு நெறியே 'இயற்கை வாழ்வியல் நெறி' என்பதை முழுதுற விளக்க வல்லது ஆதலாலும், அவனுக்கு அதன் சிறப்பைக் காட்டுதலே தமிழறிவுறுத்தலாக அமையும் எனக் கொண்டு பாடினார்.

குறிஞ்சித் திணையுள் விளக்குக.

இப்பாடல்

எத்துறை

சார்ந்தது?

குறிஞ்சித் திணையுள் இப்பாடல், ‘தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல்' என்னும் துறை சார்ந்ததாம். தலைவி கொண்ட மனமாசில்லாக் காதலை அறிந்த தோழி, அக்காதலற மாண்பைத் தன் தாயாகிய செவிலித் தாய்க்கு உரைப்பதாக அமைந்ததாகும். பின்னர்ச் செவிலித் தாய், தலைவியைப் பெற்றவளாம் நற்றாய்க்கு உரைத்துக் கற்பறத்தில் நிலைப் படுத்துவதாக அமைவதாம்.

தோழி எப்படி அறத்தொடு நிற்கிறாள்?

அன்னையே நீ நெடிது வாழ்வாயாக! யான் கூறப்போகும் செய்தியைக் கேட்டு நலம் செய்வாயாக!

என் தோழியாம் தலைவி தன்னால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு பெருந்துயரை அடக்கி வைத்துக் கொண்டுள்ளாள். அத்துயரால் மெலிவடைந்து அணிந்த அணிகலன்கள் அமையும் நிலையில் இல்லாமல் கழல்வதாயின. அவள் கொண்டுள்ள நோய்க்கு அந்நோயை எதனால் அடைந்தாளோ அம்மருந்து அன்றி வேறு மருந்து இல்லை. அதனை வெளிப்படுத்தும் துணிவு அவளுக்கு இல்லாமையால் யான் என்னுள் மறைத்தும் முடியாமல் உரைக்க லானேன் எனத் தொடங்கினாள்.

தோழி தாய்க்கு உரைத்ததென்ன?

தலைவியின் இயற்கையான அழகு குறைந்தது; அவள் தோள்கள் மெலிவுற்றன; வளையல்கள் கழன்றன; அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/303&oldid=1579592" இலிருந்து மீள்விக்கப்பட்டது