உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

271

அந்நிலையை அடைதலைக் கண்டும் அந்நிலை அவள் அடைய என்ன காரணம் என்பதை நீ அறிந்து கொள்ளவில்லை. நீ உண்மைக் காரணம் அறியாமல் பூக்கட்டிப்போட்டுப் பார்த்தாய்; கழங்குக் காயை எண்ணி அறியப் பார்த்தாய்; குறி சொல்பவரை நெருங்கி அவரிடம் காரணம் வினாவினாய்; உண்மை அறியாத பிறரும் இது தெய்வக் குறையால் நேர்ந்ததாகச் சொல்ல பல தெய்வங்களுக்கும் படையலிட்டு வழிபட்டாய். அதனால் அந் நோய் தணியாமையால் தலைவி நிலை கண்டு மேலும் வருத்தமே கொண்டாய்” என்றாள்.

இருவர் வருத்தமும் அறிந்த தோழி என்ன செய்ததாகக் கூறினாள்?

ம்

உங்கள் வருத்தத்தை அறிந்த யான் தலைவியிQ உண்மையைக் கூறுமாறு வேண்டினேன். அவள், “முத்து மணி பொன் முதலியவற்றால் செய்த அணிகலம் தொலைந்து போனாலும் மீளவும் அடைதற்கு இயலும், ஆனால் அவ்வணிகலங்களினும் மேம்பட்டதாம் ஒழுக்கம் கெட்டால் அக்கேட்டை விலக்கி மீட்டும் பெற்றுப் புகழ் பெறல் எத்தகைய அறிவர்க்கும் துறவர்க்கும் எனினும் முடியாதது ஆகிவிடும் என நூலறிவு மிக்கோர் தெளிவாகக் கூறுவர். ஆதலால் யானும் என்னை விரும்பும் தலைவனும் ஒருமனப்பட்டு ஈருடல் ஓருயிர் ஆயினோம் என்பதைத் தாய்க்குத் தெரிவித்தால் நமக்குக் குறைவு வாராது; நெஞ்சார ஏற்றுக் கொள்வர்” என்றாள்!

தலைவி கூறியதைக் கேட்ட தோழி உறுதியின்றி நோக்கத் தலைவி என்ன கூறினாள்?

"நம் நெஞ்சக் கலப்பை எடுத்துக் கூற அவர்கள் நம் தலைவர்க்குத் தர இசையார் எனின் அதனாலும் ஒன்றுமில்லை. வாழும் நாளெல்லாம் நாம் பொறுத்திருந்து இறப்போமாயின் இப்பிறப்பு ஒழிந்து மறு பிறப்பிலாயினும் நம் தலைவனை அடையும் பேற்றைப் பெறுவோம் என்று உறுதியாகக் கூறினாள்” என்றாள்.

தோழி தாயினிடம் தன் நிலையாகக் கூறியதென்ன?

"மான் போன்ற பார்வையுடைய தலைவி மயங்கியவளாய் இருப்பதையும்,அவள் நிலையை நோக்கி நீயும் அவலப்படுவதையும் எண்ணி யான் செயல் இழந்து தவிக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/304&oldid=1579593" இலிருந்து மீள்விக்கப்பட்டது