உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் – 9

பகை கொண்டு நிற்கும் வேந்தர் இருவரை அமைதிப் படுத்திப் போர் ஒழியுமாறு செய்ய வல்ல சான்றோர் போல உங்கள் இருவர் துயரையும் அமைதிப்படுத்தி நலம் செய்ய ஆற்றாதவளாய் யானும் வருந்துகிறேன்” என்று கூறினாள்.

தோழி தாயினிடம் மேலும் கூறியதென்ன?

66

"அன்னையே, நம் முந்தையர் தேர்ந்து கூறிய முறைப்படி நம் குடிக்குத் தக்க குடிமைச் சிறப்பும் பண்புச் சிறப்பும் சுற்றத்தார் நலச் சிறப்பும் ஒத்திருக்கக் கண்டே இம்முடிவுக்கு நாங்கள் வந்தோம்” என்றாள்.

காதல் நிகழ்ந்த வகையைத் தாய்க்குத் தோழி எவ்வாறு கூறுகிறாள்?

அன்னையே இக்காதல் நிகழ்ந்த வகையைக் கூறுகிறேன். சினங்கொள்ளாமல் கேட்டருள்வாயாக என்று தொடங்கினாள்.

தோழி கூறியதென்ன?

66

தினைக் கதிரைத் தின்னவரும் கிளிகளை ஓட்டி பகற் பொழுது போகு முன்னர் நீங்கள் வீட்டுக்கு வருவீராக” என்று எங்களை நீ விடுத்தனை. நாங்களும் அவ்வாறே தினைப்புனம் சென்றோம்.

ஆங்கு மரத்தின்மேல் கட்டப்பட்ட பரணில் ஏறி, கவணும் தட்டைப் பறையும் குளிர் என்னும் பறையும் எடுத்து ‘ஆ’ ‘ஓ’ எனக் குரலெடுத்துக் கூறிக் கிளியை ஓட்டினோம். கதிர் மேலே ஏறுதலால் வெயிலும் மிகப் பறவைகள் தத்தம் கூட்டை அடைந்தன.

கடல்நீர் முகந்த கருமுகில் மின்னி இடித்து மலைமேல் மழை பொழிந்தது. அதனால் பெருகிய நீர் அருவியாகி வீழ்ந்தது. அவ்வருவியில் மிக விருப்புடை யோமாய் நீராடினோம்; சுனையில் சுழன்றும் ஆடினோம், பொன்னில் பதித்த மணி போன்ற கூந்தல் முதுகிலே படிய அதனைப் பற்றிப் பிழிந்து உலர்த்தினோம். நீரில் நீடிய பொழுது ஆடுதலால் கண் சிவப் புற்றது என்றாள்.

தோழி அதன்மேல் நிகழ்ந்தனவாக என்ன கூறுகிறாள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/305&oldid=1579595" இலிருந்து மீள்விக்கப்பட்டது