உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

273

பின்னர்க் கண்கவரக் காட்சி வழங்கிய பூக்களைப் பறிக்கும் ஆவலோடு செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, வெட்சி,சிவந்த கொடுவேரி, தேமா, மணிச்சிகை, மூங்கில்; எறுழ், மராமரம், கூவிரம்,வடவனம், வாகை, குடசம், எருவை, செருவிளை, கருவிளை, பயினி; வானி, குரவம், வகுளம், காயா, ஆவிரை, வேரல், சூரல், பூளை, குன்றி, முருக்கிலை, மருது, கோங்கு, மஞ்சாடி,பாதிரி, செருந்தி, புனலி, கரந்தை, காட்டுமல்லிகை, மா, திலை; பாலை, முல்லை, கஞ்சா,பிடவம், செங்கருங்காலி, வாழை, வள்ளி, நெய்தல், தெங்கம் பாளை; செந்தாமரை; ஞாழல், மௌவல், கொகுடி, செம்மல்லிகை, சிறுசெங்குரலி, கோடல், தாழை, நறுவழை, காஞ்சி; மணிக்குவை நெய்தல், மராஅம், தணக்கு, ஈங்கை, இலவம், கொன்றை, அடும்பு, ஆத்தி, அவரை, பகன்றை; பலாசம், பிண்டி, வஞ்சி, பித்திகை, சிந்துவாரம், தும்பை, துளசி, தோன்றி, நந்தி, நறவம், புன்னாகம், பாரம், பீரம்,குருக்கத்தி, ஆரம், அகில், நரந்தம், நாகம், நள்ளிருள், நாறி, குருந்தம்; வேங்கை பரேரம், புழகு முதலாய பூக்களைப் பறித்து மழையால் கழுவித் தூய்மை செய்யப்பட்ட பாறையில் குவித்தோம்; தழைகளைப் பறித்துத் தழையுடை பூண்டோம்; நறுமென் பூக்களைக் கூந்தலில் சூடினோம் என்று நிறுத்தினாள் தோழி.

அவளை நோக்கிய தாய்க்கு மேலே நிகழ்ந்ததாக என்ன கூறுகிறாள்?

நாங்கள் செந்தளிரமைந்ததும் பூம்பொடி உதிர்வதுமாம் செயலையின் நிழகலில் இருந்தோம். அப்பொழுதில் அங்கே ஓர் தோன்றல் எய்தினான். அவன் கரிந்து சுரிந்து நறுமணம் கமழும் குடுமியை உடையவன்; பல்வகை மலர்களைப் பாங்குறத்தொடுத்து அணிந்த மாலையினன்; சந்தனம் கமழும் மார்பில் அணிகள் பல பூண்டவன்;அவன் தலையில் சுற்றிய பித்திகை மாலையும் காதில் செருகிய செயலைத் தளிரும் தனி அழகாகப் பொலிந்தன. அவன் அழகுற உடுத்த உடை மேல் பொலிவான

கச்சுக்

கட்டியிருந்தான். கையில் வில்லும் கணையும் கொண்டிருந்தான். காலில் கழல் இலங்கியது; எதிரிட்ட வீரரை எல்லாம் வென்று எதிரிட வருவார் உளரா என்னும் வீறுடையான்; வெள்ளிய பற்களையுடைய அவன் நாய்கள் எங்களை வளையவர நாங்கள் நடுங்கினோம். அந்நிலையில் எங்களை அணுகி மெல்லியதும் இனியதும் கேட்கும் தோறும் விரும்பத் தக்கதுமாம் சொற்களைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/306&oldid=1579598" இலிருந்து மீள்விக்கப்பட்டது