உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

274

மறைமலையம் - 9

சால்லி, தண்ணிய கண்களையுடைய இளைவர்களே அஞ்சாதீர் என்று தேற்றி, எம்மை தப்பி வந்ததோர் விலங்கு, இவணுற்றது நீவிர் கண்டிரோ? என்றான். யாங்கள் அதற்கு யாதொரு மறுமொழியும் சொல்லோமாய் நின்றோம். எங்களை விரும்பி நோக்கிக் கண்டதைக் கூறிர் எனினும் எம் வினவலுக்கு மறுமொழி கூறலும் பழியாமோ என்று வினவினான். சூழ்வந்து குரைத்த நாய்களை அடக்கி எங்கள் சொல்லை எதிர்பார்த்து எங்களை நோக்கி நின்றான், என்றாள்.

மேலும் நிகழ்ந்தது கூறலை எதிர்பார்த்த தாய்க்கு என்ன கூறினாள் தோழி?

கூரைக் குடிசையில் வாழ்ந்த குன்றவன் தன் மனைவி வடித்துத் தந்த கள்ளை அருந்தி மயங்கிப் போய்த் தினைக் காவலைச் செய்யா தொழிந்தான். அதனால் புனத்துள் புகுந்த யானை தினையைத் தின்றும் மிதித்தும் அழிவு செய்தது; அழிவுக்கு வருந்திய அவன் தன் வில்லை வளைத்து அம்பை ஏவி யானையை வெருட்டலானான்; தட்டைப்பறை அறைந்தான்; சீழ்க்கை ஒலித்தான்; சினம் கொண்ட யானை மரங்களை முரித்தது; இடியென முழக்கமிட்டது; கொல்ல வரும் கூற்றே போல எங்களை நோக்கி வந்தது. நாங்கள் நடுக்கமுற்று உயிர் தப்புவதற்கு எண்ணி, இயல்பான நாணத்தை விடுத்து அத் தோன்றலை அணுகி நின்றோம். அவன் எங்கள் நடுக்கம் போம் வகையில் அம்பை ஏவி அவ் யானையின் மத்தகத்தைத்தாக்கினான்; குருதி பெருக்கெடுக்க அவ்விடத்தை விட்டுத் தப்புவதற்கு யானை ஓடிற்று” என்றாள்.

மேலும் தாயினிடம் தோழி என்ன கூறினாள்?

“எங்கள் நடுக்கமும் அச்சமும் தீரவே ஆங்கிருந்த கடம்ப மரத்தின் அடியைச் சுற்றி யாங்கள் கைகோர்த்து ஆடினோம். ஆற்று நீரில் வீழ்ந்து விளையாடினோம். அப்பொழுது பெருகிய வெள்ளம் எங்களை ஈர்த்துச் சென்றது. அதனைக் கண்ட அத்தோன்றல் விரைந்து வந்து எங்களை எடுத்துக் காத்தான், தலைவியை நோக்கி நின் எழில்மிக்க நலத்தை நுகர்வேன்; இனி என்றும் உன்னைவிட்டு நீங்கேன்; அஞ்சாதே என்று சொல்லி அவள் நெற்றியை வருடினான்; என்னை நோக்கி நகைத்து என் உதவியை நாடுவான் போல் நின்றான். தலைவிக்கு இயல்பான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/307&oldid=1579599" இலிருந்து மீள்விக்கப்பட்டது