உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

மறைமலையம் – 9

காட்டு விலங்குகள் குரலெழுப்பிக் கூடிச் சேர்ந்தன. இவ் வகையாக மாலைப் பொழுது எய்தியது,” என்றாள்.

தலைவன் கூறிய உறுதிமொழியாகத் தோழி கூறியதென்ன?

66

“ஒளிமிக்க அணிகளை அணிந்தவளே, உன் பெற்றோர் உற்றார் உறவினர் உன்கையைப் பற்றி என் கையில் ஒப்படைக்கும் திருமணம் பின்னே நிகழும். அஃது ஊரவர் அறிய நடைபெறுவதாகும். அதுவரை நம் மனம் ஒருமித்த காதல் தொடர்வது பற்றிக் கவலைப்படாதே, என்று தலைவி நெஞ்சம் நிறைவுறும் சொற்களைத் தலைவன் உறுதியாகச் சொன்னான். அவ்வளவில் நில்லானாய்ப் பசுவைத் தொடுத்து வரும் கன்று போல உடன் வந்து நம்மூர் முகப்பிலுள்ள நீர்துறையில் விடுத்துப் பிரியமாட்டாமல் பிரிந்து சென்றான்” என்றாள்.

பின்னும் நிகழ்ந்தனவாகத் தோழி கூறியதென்ன?

முதல்நாள் தோன்றிய காதலொடு தொடர்ந்து இரவுப் பொழுது இவண் வந்தான். அவ்வாறு வரும்போது அவனுக்கு உண்டாகும் இடையூறுகள் பல. காவலர் கருத்தோடு கண் காணிப்பர்; இரவு வரும் புதியனைக் கண்டு நாய்கள் குரைக்கும்; நீ உறக்கம் நீங்கி விழிப்போடு இருப்பாய்; நிலவு பளிச்சிட்டுப் பலரும் அறியச் செய்துவிடும்; எனினும் அவற்றைக் கருதாமல் தலைவன் வருவான். தலைவியைக் காண முடியா நிலையில் திரும்பினாலும் வருதலைத் தவிர்ந்தான் அல்லன். குறிப்பிட்ட இடம் அடையாளம் ஆகியவை தவறிக் காணாமல் சென்றாலும் வருதலைத் தவிர்ந்தான் அல்லன் என்றாள்.

தலைவன் தகுதிகளாகத் தோழி கூறியதென்ன?

தலைவன் தகவமைந்த அகவையன்; நற்குணங்கள் எதுவும் குறையாதவன்; குடிப்பெருமை போற்றுபவன்;சொல்மாறாதவன்; இவ்வாறு தொடர்ந்து களவொழுக்கம் கொள்ளல் பெருமை யாகாது; விரைந்து வரைந்து கொண்டு இல்லறம் நடத்துதலே இருபாலும் நலம் என்று தலைவி கூறுவதை ஒப்புக் கொண் டுள்ளான். அவன் இரவில் வரும் வழியின் இருள், விலங்கு, பாம்பு முதலை முதலியன திரிதல் இவற்றை எண்ணி வலையகப்பட்ட மயிலெனத் தலைவி வருந்திக் கலக்கம் கொண்டுள்ளாள். அவள் கொண்டுள்ள மாசில்லா மனத்துக் களவு நிலை இதுவே என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/309&oldid=1579601" இலிருந்து மீள்விக்கப்பட்டது