உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

· குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

277

தோழி தாய்க்கு அறத்தொடு நின்றாள்" எனக் குறிஞ்சிக் கபிலர் தம்பாடலை நிறைவு செய்கிறார்.

திருமணம் முடிந்த வகையைக் கூறாமல் முடித்ததேன்?

தமிழர் அறம் களவுக் காதல், கற்பறம் ஆகாமல் போகாது என்பது தெளிவான உண்மை ஆகலின் திருமணம் முடித்து இல்லறம் நடத்தினார் என்பதே முடிபொருளாம்.

கபிலர் பல்வகை மலர்களைப் பறித்தனர் என்று கூறி அமை யாமல் ஒன்று குறை நூறு பூக்களின் பெயர்களை அடுக்கிக் கூறுவானேன்?

அவ்வாறு அவர் அடுக்கிக் கூறுதல் தம் பெரும் புலமை காட்டுதற்காக அன்று. தமிழர் இயற்கையொடும் இரண்டறக் கலந்து வாழ்ந்து ஒவ்வொரு மரம் செடி கொடிக்கும் பெயரீடு செய்த சிறப்பை ஆரிய அரசன் பிரகத்தன் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கேயாம். நாமே நம் இயற்கைச்செல்வங்களையும் அவற்றின் பெயர்களையும் பயன்பாட்டையும் எப்படி இழந் துள்ளோம் என்பது நம் மனத்தைக் குடையவில்லையா?

திருவள்ளுவர் கூறும் அறத்தின் இலக்கணத்திற்கும் இவ் வறத்தொடு நிற்றலுக்கும் தொடர்பு உண்டா?

தொடர்பு உண்டு. மிகவே உண்டு; திருவள்ளுவர் கூறும் இலக்கணம் தொல்காப்பியர் கூறும் அறத்தொடு நிற்றல் என்னும் இலக்கண வழி வந்ததேயாம்.

மனத்துக்கண் மாசில்லாமையே காதல் தொடக்க

இலக்கணமாம்,

மனமாசமைந்த காதல் கேடு உயிரையே காவு வாங்குவது. கண்கூடு, இதனைப் பொதுமக்களும் உணர்ந்தால் தான், ‘கரணம் தப்பினால் மரணம்” என்றனர்.

66

கரணமாவது திருமணம். காதலித்த ஒருவனோ ஒருத்தியோ தங்கள் காதல் உறுதிப்பாட்டில் தவறினால் இறப்பே நேர்தல் காணலாம். வாழ்ந்தாலும் இறந்தாலொத்த வாழ்வாகவே இருக்கும். ஆதலால் காதல், காதல் வாழ்வுக்கும், கற்பு வாழ்வுக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/310&oldid=1579603" இலிருந்து மீள்விக்கப்பட்டது