உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

41

இணங்கக் கொளுத்தி, ஆசிரியர் இச் செய்யுளைத் திறம்பட நடாத்தும் நுட்பவினையின் அருமைப் பாட்டை உய்த்துணர்ந்து மகிழ்ந்து கொள்க.

66

இன்னும் இவ் வகப்பொருள் முல்லையொழுக்கத்தினை வ்வாறு நடாத்திக்கொண்டு சென்று, 88 ஆவது வரியில் இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்” என்பதுடன் முடிக்குமிடத்தும் வினைவயிற்பிரிந்த தலைமகன் மீண்டு வந்தமை சொல்ல வேண்டுதலின், அங்ஙனஞ் சொல்லப்படும் பொருளையுங் கற்போர் உற்றுநோக்கும் பொருட்டு 'இவ்வாறு கிடந்தோளுடைய அழகிய செவிநிறைய ஆரவாரித்தன' என்று மேல் ஓட்டப்படுஞ் சொற்றொடரின் பயனிலையான ‘ஆரவாரித்தன' என்பதை, முடிக்கப்படும் அகப்பொருளின் இறுதி மொழியான 'கிடந்தோள்' என்பதுடன் சேர்த்தி, அதன் எழுவாயான 'வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே' என்பதைக் கடையிலே நிறுத்தி, அவ்விரண்டற்கும் இடையில் அவன் மீண்டு வந்தமை விளங்கக்கூறி அமைத்தார். முடிக்கின்ற டத்திற் ‘கிடந்தோள் செவி நிறைய ஆலின' என்று உரைப்பின், எவை ஆலின? என்னும் ஆராய்ச்சி தோன்றி மேல்வரும் பொருள் அறிய வேட்கை மிகும் ஆதலால், இவ்வாறு பயனிலையை முன்னும் எழுவாயைப் பின்னுமாக வைத்துப் பிறழக்கூறினார் என்க. இங்ஙனம் பிறழக் கூறுதல் பொருள் வலிவு தோன்றுதற் பொருட்டுங், கற்பார்க்கு மேலுமேலும் விழைவுள்ளந் தோற்று வித்தற் பொருட்டுமேயாம் என்பது ஆங்கில மொழியிற்ை பெயின் என்பவர் எழுதிய அரியதோர் அணியிலக்கண நூலிலுங் கண்டுகொள்க. இந் நுணுக்கமெல்லாம் நன்கறிந்து செய்யுளி யற்றிய நப்பூதனார் பேரறிவும் பேராற்றாலும் பெரிதும் வியக்கற்பாலனவாம் என்க.

1.

2.

அடிக்குறிப்புகள்

தொல்காப்பியம், பொருள் 61.

Alexander Bains English Composition and Rhetoric, Part I Rules 10 -

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/74&oldid=1578922" இலிருந்து மீள்விக்கப்பட்டது