உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

4. முல்லைப்பாட்டில் நீளச் சென்று பொருந்தும் சொற்றொடர் முடிபு: மாட்டு

இனி, மேற்கூறியவாறு முல்லைப்பொருள் ஒழுக்கம் 23 ஆவது வரியிலே இடையறுந்து நிற்ப, நடுவே வஞ்சிப்பொருள் புகுத்தப்பட்டுத் திரும்பவும் 80 ஆவது வரியிலே தன்பொருள் பொருந்தி, 88 ஆவது வரியில் அது முற்றுபெருந் தறுவாயிற் பின்னும் முடிவு பெறாததுபோல் நின்று இடையே வேறு பொருள் தழுவி 103 ஆவது வரியிலே பொருள் முதிர்ச்சிபெற்று முடிந்தது உற்றுணரற் பாலதாம் என்க. இங்ஙனம் ஒரு பாட்டின் முதன்மைப் பொருள் இடையிடையே அறுந்து அகன்றுபோய்ப் பொருந்தி முடிதல் இம் முல்லைப்பாட்டிற்கும் இதனொடு சேர்ந்து ஏனைஒன்பது பாட்டுக்களுக்கும்பொதுவியற்கையாகும். இவ்வாறு அகன்று கிடக்கும் பொருளை அணுகப் பொருத்திக் காட்டுதலையே ஆசிரியர் தொல்காப்பியனார் ‘மாட்டு' என்பர்.

66

‘அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும், யன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டெ மொழிப பாட்டியல் வழக்கின்” என்பது சூத்திரம் (தொல்காப்பியம், செய்யுளியல், 211)

பெருங்காப்பியங்களும் இத்தகைய பெரும் பாட்டுக் களும் இயற்றுகின்ற பெரும்புலவர் இவ்வாறு அகன்று பொருள் முடிய வைத்தல் உயர்ச்சியடைந்த எல்லா மொழிகளிலுங் காணப்படும். ஆங்கில மொழியில் நல்லிசைப் புலவரான மில்டன் (Milton) என்பவரும் இவ்வாறே தம்முடைய செய்யுட்களில் அகன்று பொருள் முடியவைத்தல் கண்டுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/75&oldid=1578923" இலிருந்து மீள்விக்கப்பட்டது