உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் - 9

குதிரைகளை நினைந்தும் மிகுந்த இரக்கம் உடையோனாய் ஒரு கையை அமளி மேல்வைத்து ஒரு கையினால் முடியைத் தாங்கி இவ்வாறு நீள நினைந்து இருக்கின்றான்.

(72 - 80) தலைவனது வெற்றியும், அவன் பாசறையில் இனிது உறங்குதலும்

இனி, இவ்வாறு முன்னாளிரவு உறக்கமின்றிக் கவலை யோடிருந்த தலைமகன் பின்னாளிற் பகைவரை யெல்லாம் வெற்றி கண்டு, தன் வலிய விரலாலே நல்ல வாகை மாலையினைச் சூடிக்கொண்டு, 'நாளை மாலையில் தலைவியைக் காண்போம்' என்னும் மகிழ்ச்சியினால் ஒரு கவலையுமின்றிப் பகையரசர் கேட்டு நடுங்குதற்குக் கருவியான வெற்றி முரசு முழங்குந் தன் பாசறை வீட்டில் இனிது துயில்கொண்டிருக்கின்றான்.

66

(80-88) பாட்டின் பொருட்காட்சி துயரமுந் தேறுதலுங் கலந்த நிலையிற் படுத்துக் கிடக்குந் தலைமகளின் முல்லைக்காட்டு மாளிகைக்குத் திரும்பவும் மாறுகின்றது.

இனி, இங்ஙனம் பாசறையில் இனிய உறக்கத்திலே கிடக்கின்ற தலைமகனைத் தன் பக்கத்திலே காணாத தலை மகள் அவனிடத்தே தன் நெஞ்சினைப் போக்கி மிக வருந்தும் வருத்தத்தால், முதுபெண்டிர் நற்சொற் கேட்டு வந்து ஆற்றுவிக்குஞ் சொற்களையுங் கேளாமற் வருந்துகின்றவள், ங்ஙனம் ஆற்றாமே வருந்தினால் அது நம் பெருமான் கற்பித்த சால்லைத் தவறியதாய் முடியுங் கொலோ” என்று நெடுக நினைந்து பார்த்துத் தன்னைத் தேற்றிக்கொண்டுங், கழன்று விழுகின்ற வளையைக் கழலாமற் செறித்தும், ஆற்றாமை யுணர்வும் அதனைத் தேற்றுகின்ற உணர்வும் ஒன்று சேர்தலால் அறிவு மயங்கியும், அவ்வறிவு மயக்கத்தாற் பெருமூச்செறிந்து நடுங்கியும், அந்நடுக்கத்தால் உடம்பிற் செறிந்த அணிகலங்கள் சிறிது கழலப் பெற்றும், ஏழடுக்குமாளிகையிற் பாவை விளக்கு எரியக் கூடல்வாயிலிலே மழைசொரியும் ஓசை காதில் விழ இம்மாலைக்காலத்திற் படுக்கையிற் கிடக்கின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/91&oldid=1578941" இலிருந்து மீள்விக்கப்பட்டது