உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

(89 - முதல் கடைசிவரையில்) தலைவன் மீண்டு வருதலும், நாட்டின் மழைக்காலச் சிறப்பும்

59

இனித் தலைமகன் தன் மாற்றாரையெல்லாம் வென்று பகைப் புலத்தைக் கவர்ந்துகொண்ட பெரும் படையொடு வெற்றிக்கொடியை உயரத்தூக்கி ஊது கொம்புஞ் சங்கும் முழங்கவும், காசாஞ்செடிகள் நீல மலர்களைப் பூக்கவுங், கொன்றைமரங்கள் பொன்போல் மலரவுங், காந்தள் அழகிய கைபோல் விரியவுங், தோன்றிப்பூச் சிவப்பாக அலரவும், இளமான்கள் தாவியோடவுங், கார்காலத்து முற்றுங் காயினையுடைய வள்ளிக்காடு பின் போகவும் முல்லை நிலத்திலே மீண்டு வரும்போது, அவனது தேரிற் கட்டிய குதிரை கனைக்கும் ஓசையானது ஆற்றிக் கொண்டு அங்ஙனங்கிடக்குந்

வரகங்கொல்லையில்

ஆரவாரித்தது என்க.

தலைமகள் செவியிலே நிறைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/92&oldid=1578942" இலிருந்து மீள்விக்கப்பட்டது