உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

9. பாட்டின் பொருள்நலம் வியத்தல்

கடலில் முகந்த நீரைப் பொழிந்து கொண்டே எழுந்து உயர்ந்த கரியமுகிலிற்கு, மாவலி வார்த்த நீர் ஒழுகுங்கையுடனே ஓங்கி வளர்ந்த கரிய திருமாலை ஒப்புமை கூறியது மனனுணர்விற்கு இசைந்த உவமையாகப் பொருந்தி நிற்கின்றது. நிலத்தில் ஊன்றிய வில்லிலே அம்பறாத் தூணியைத் தொங்கவிட்டிருப்பதற்குப், பார்ப்பனத் துறவி காவிக்கல்லில் தோய்த்த உடையைத் தனது முக்கோலிற் றொங்க விட்டிருப்பதை உவமை கூறியது மிகவும் பொருத்தமாகவிருக்கின்றது. இதனால் இவ்வாசிரியர் துறவிகளிடத்துப் பழக்கமுடையர் என்பதுந், துறவொழுக்கத்தில்

வேட்கையுடையரென்பதுங் குறிப்பாக அறியப்படும்.

மெய்க்காப்பாளர் பாடிவீட்டில் இடையாமத்திலே தூக்க மயக்கத்தோடும் அசைந்து திரிதல், பூத்த புனலிக் கொடி படர்ந்த தூறு வாடைக்காற்றில் அசைவது போல் இருக்கின்றது என்பதனாலுங், காயாமலர் கறுப்பாகவுங், கொன்றை பொன்னிறமாகவுந், தோன்றி சிவப்பாகவும் இருக்கும் என்பதனாலும், வரகங் கொல்லையில் கால்லையில் மான்கள் தாவிக் குதிக்கின்றன, கார்காலத்தில் வள்ளிக்கிழங்கு முற்றிவிடுகின்றன என்பதனாலும், இவர் இயற்கைப் பொருள்களைக் கண்டறிவதிலும், அவற்றைத் தாங்கண்டவாறே சொல்வதிலுந் திறமைமிக்குடையரென்பது இனிது விளங்கும்.

இன்னும், முதுபெண்டிர் நற்சொற் கேட்கும் பொருட்டு ஊர்ப்பக்கத்தே திருமால் கோயிலிற் போய் நாழி நெல்லும் முல்லையுந் தூவி வணங்குதலுங், குளிர் மிகுதியால் தோளிற் கட்டிய கையுடன் நிற்கும் ஓர் இடைப் பெண் ஆன்கன்றுகட்குத் தேறுதல் சொல்லுதலுங், காட்டிலே பாடி வீடு அமைத்தலும், அப்பாடிவீட்டினுள் நாற்சந்தி கூடும் முற்றத்திலே யானைப்பாகர் யானையைக் குத்திக் கவளம் ஊட்டுதலும், வில்லினால்

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/93&oldid=1578943" இலிருந்து மீள்விக்கப்பட்டது