பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாராயணன் செட்டியார், கண்ணுவின் கல்யாணத்தை தட புடலாக நடத்தினர். நாதசுரக் கச்சேரி முதல் நாட்டியக் கச்சேரி வரை, க ண் ணு வி ன் திருமணத்தை அமர்க்களப் படுத்தின. இன்று நாராயணன் செட்டியார் குடும்பம் நசித்துப் போய் விட் டது என்பதற்காக கண்ணப்பனுக்கும் கண்ணுவுக்குமுள்ள பந்த மும், பாசமும், ரத்தக் கலப்பும் வற்றிப் போய் விடுமா? எந்த மாமனர் ஒரு காலத்தில் கண்ணப்பனுக்கு வலிய வலிய வந்து அள்ளி அள்ளி கொடுத்தாரோ, எந்த மாமனர் ஒரு காலத் தில் ம க ள் கண்ணுவுக்கு வெள்ளியிலும், வெண்கலத்திலும் வண்டி வண்டியாகப் பாத்திரங்களை அ னு ப் பி வைத்தாரோ அந்த மாமனர் இன்று விடியற் காலேயில் எழுந்ததும் வேப்பங் குச்சியைப் பல்லில் வைத்துத் தேய்த்துக்கொண்டு முகட்டையே பார் த் து க் கொண்டிருப்பது கண்ணப்பனே வாட்டத்தான் செய்தது. கண்ணப்பன் குடும்பத்திற்கு மூத்தவன். அவன்தான் தலை மகன் ஒரு குடும்பத்தில் மூத்தவனுக்கே குழப்பம் ஏற்பட்டு விட் டால் அந்தக் குடும்பத்திலே குது.ாகலம் இருக்காது. அந்த வீடே உரமில்லாத பயிரைப்போல், உவட்டுத்தரையில் குன்றி நிற்கும் தென்னையைப்போல் பளபளப்பை இ ழ ந் து விடும். எல்லாம் தெரிந்த கண்ணப்பனுக்கு இது தெரியாமல் இல்லை. அவன் ஒரு பட்டதாரி, தமிழிலும் பாண்டித்தியம் பெற்றவன். இருந்தாலும் அவன் உள்ளத்தின் ஒரு மூலையில் குறுகுறுப்பு இருந்துகொண்டு தானிருந்தது. அதனல் அவன் பலவீனமடைந்துவிட்டவனைப் போல் தோன்றலானன். உடல் பலவீனமடைந்தால் மருந்து சாப்பிடலாம். மனம் பலவீனமடைந்தால் எந்த மருந்தைச் சாப் பிடுவது? ஆயிரம் களம் நெல்லே ஒரு பெரிய களஞ்சியத்திலே போட்டுப் பூட்டி விடலாம். அதற்குள்ளே ஒரு அந்து புகுந்து விட்டால் யாராலும் அ ந் த க் களஞ்சியத்தைக் காப்பாற்ற முடியுமா? - அன்று கண்ணப்பனுக்குத் தூக்கமே வரவில்லை. மல்லாந்து படுத்தபடி எப்போது விடியும் என்றே விழித்துக் கொண்டிருந் தான். அவனது அறையின் கிழக்கு ஜன்னல் வழியாக சிறுகச் சிறுக வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. அறைக்குள்ளே இருந்த 9