பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டைம்ப்பீஸ் கடிகாரம் அலறியது. கண்ணப்பன் எழுந்து சுவரில் மாட்டப்பட்டிருந்த மறைமலை அடிகள் படத்திற்கும், பாரதி தாசன் படத்திற்கும் வணக்கம் போட்டு விட்டு அடுத்த தாழ் வாரத்திற்குப் போய் அங்கே கி ட ந் த கர்லாக் கட்டையை எடுத்துச் சுற்ற ஆரம்பித்தான். அவன் தேகப்பயிற்சி செய்ய ஆரம்பித்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக கண்ணு அந்த இடத்திற்கே காபியை கொண்டு வந்து விட்டாள். அவள் அங்கு வருவது எப்போதும் இல்லாத பழ க்க ம்; எப் போதுமே தேகப்பயிற்சி முடிந்து கண்ணப்பனுகக் கேட்ட பிறகு தான் கண்ணு காபியைக் கொண்டு வருவாள்; அன்று மட்டும் கண்ணு முந்திக் கொண்டாள். 'இன்னுமா இந்தப் பழக்கம் போகவில்லை? நமக்கு எதற்கு இதெல்லாம்? - 'நீ சொல்லுவதும் சரிதான் கண்ணு. ஒரு நல்ல பழக்கத்தை திடீரென்று நிறுத்தி விட்டால் உடல் கெட்டுப் போய் விடுமே என்று யோசிக்கிறேன். அதுவும் போக, ஒரு நல்ல பழக்கம்போய் புதிதாக ஏதாவது கெட்ட பழக்கம் வந்து உடம்பு கெட்டு விடக் கூடாதே என்ற பயமும் எனக்கு இருக்கிறது!” 'உடம்பினுலே ஒன்றுமில்லை” என்ருள் கண்ணு. இது சாதாரண பதில்தான். ஆனால் இந்தப் பதில் கண்ணப் பன் உள்ளத்தில் முள் தைப்பதுபோல் பட்டது. நீ சொல்வது எனக்கும் புரிகிறது கண்ணு! உனக்கும் எனக் கும் இப்போது இளமையா போய் வி ட் ட து? எத்தனையோ பெண்களுக்கு நாற்பது வயதுக்கு மேலே குழந் ைத பிறந்த தில்லையா?” - கண்ணப்பன், கண்ணுவுக்குப் பதில் சொல்லி விட்டானே தவிர, அவன் மனதுக்குப் பதில் சொல்லிக் கொள்ள அவனுல் முடிய வில்லை. கண்ணுத்தாளின் கண்களில் நீர் கோத்து விட்டது. 'அத்தை முன்னைப் போல இப்போது என்னோடு கலகலப் IO