பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன நினைச்சாரோ தெரியல்லை எங்க அப்பா, திடீர்ன்னு ஒரு நாள் காலை என் அறைக்கு வந்தார். தி டு க் கி ட் டு ப் போனேன். பிரதிவாதி பயங்கரம் பிச்சாழ்வார் ஊரிலே உள்ளவன் கொலைக்கேஸெல்லாம் எனக்குத் துப் பறியும் கதை மாதிரி. சிரிச்சுக்கிட்டே கேட்டுக்கிட்டிருப்பேன். சில நேரங்களிலே கு று க் கே யு ம் பேசுவேன். எதிரியைக் கொன்றுபோட்டு சில பேர் அரிவாளுடனே இந்த வீட்டுக்கு வருவா. அப்பக்கூட நான் கலங்கியதில்லை -"அட சண்டாளப் பயலே, அரிவாளை எங்காச்சம் புதைச்சுட்டு வரப்படாதா?’ என்று தான் கேட்பேன். கோர்ட்லேகூட நான் நீதிபதிகளுக்குப் பயப்படறதில்லை. சேம்பர்லே மேஜையிலே குத்திப் பேசுவேன். பிராசிகியுஷன் தரப்பை அலறவைப்பேன். சிரிக்கத் தெரியாத நீதிபதிகளைக் கூட சிரிக்க வைப்பேன். அப்படிப்பட்ட நான் என்னை விட இருபது வயது இளைய பெண்ணிடம் சிக்கிக்கிட்டுத் தவிக்கி றேன். புராணங்களிலே இந்த மோகினிகளைப்பற்றிச் சொல்லி யிருப்பதெல்லாம் உண்மை தான். இனிமே எ ந் த சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்கூட அதை மாத்த முடியாது. - வீடு கலகலப்பாயிருந்தா வீட்டிலே உள் ள ஆம்பளைங், களுக்கு ஓரளவு நிம்மதி தான். ஒரே பொண்ணிடம் ஒரு மாளிகையிருந்தால் கோழிப் பண்ணைக்குள்ளே மலைப்பாம்பு புகுந்த மாதிரிதான். அதுக்கு நான் ஏற்பாடு செஞ்சிருக்கேன். கோபிநாத்திற்கு கலியாணம் .ெ ச ஞ் சு வைச்சுடுவதுன்னு முடிவு பண்ணிப்பிட்டேன். அவன் ஒருக்காலும் என் சொல் லைத் தட்டமாட்டான். அவன் ம ன சு லே யும் ஒரு குறை இருக்கு. இப்ப அவனுக்கு இ லை யி லே சாப்பாடு போட ஆளில்லை. காமுவைப் போடச் சொன்னல் அவள் அடம் பிடிச்சுடுரு. சித்தி எனக்கு சாப்பாடு போடுன்னு கோபி கூப் பிட்டாத்தான் நான் வருவேன்’ரு. இந்த வைத்தியத்திற்கு I00