பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரம் மாதிரி. அந்த மோக ம் நீண்ட நாளைக்கு நிலைப்ப தில்லை. எங்க அப்பா அனுப்பிய கலியானப் பத்திரிகை நினைவுக் குக் கொண்டு வந்தது. ஆளுல் அதே காமேசுவரிதான் எங்க அப்பாவுக்கு ரெண்டாந்தாரமாக வாய்ப்பாள் என்று நான் சொப்பணம்கூடக் காணவில்லை. நான் தாய்நாட்டுக்கு திரும் பும்போது எ ன் னை வரவேற்பதற்காக எ ங் க அப்பாவும் காமேஸ்வரியும் வந்திருந்தாங்க. அவளைப் பார்த்ததும் எனக் குப் பழைய நினைவுகள் ஓடிவந்தன. சே! அதையெல்லாம் இப்ப நினைக்க எனக்கே வெட்கமா யிருக்கு. இப்ப அவளே எனக்கு சின்னம்மா ஆய்ட்டாளே! அவளுடைய காதுக்குப் பக்கத்தில் இரு ந் த மச்சத்தைக் காலேஜ் மாணவர்கள் கருப்பு வைரம் என்று புகழ்ந்தார்கள். அதே மச்சம் எனக்கு மாணவர்களின் கோஷங்களை ஞாபகப் படுத்தின. z நான் விமான தளத்திலே இறங்கியதும் எங்க அப்பாவை நமஸ்கரித்தேன். சம்பிரதாயத்திற்காக சித்தியையும் நான் நமஸ்கரிக்க வேண்டுமல்லவா! அதையும் செய்தேன். பத்து வருஷத்துக்கு முன்னடி நம்ம வீட்லே வேலை பார்த்தவன் கோடீசுவரனுகி அவனிடம் போயி நாமே க ட ன் கேட்க வேண்டியிருந்தால் எப்படியிருக்குமோ அ ந் த நிலை தான் எனக்கு ஏற்பட்டது. - , - மாடியிலே எனக்கு ஒரு தனியறை. அந்த அறைக்குள் ளேயே நான் முடங்கிக் கிடந்தேன். நான் மேல் நாட்டிலே படிச்சவையெல்லாம் இங்கே வந்ததும் மறந்தே போச்சு. கீழ் வீட்டிலே காமேஸ்வரி இருந்தாள். எங்க அப்பாவும் கீழே தனியறையிலே இருந்தார். . . . . . . . . நானு ம் காமேஸ்வரியும் - பேசிக்கொள்ளாதது எங்க ஆப்பரவுக்குத் தெரிஞ்சிருந்தது. ஆனல் அதை எங்க அப்பா பெருந்தன்மையா எடுத்திருப்பார். பையன் கூச்சப்படுருன்னு நீனேச்சிருப்பார். உண்மை அதில்லையே. '99