பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதோ கார் சத்தம் கேட்கிறது. பிரதிவாதி பயங்கரம் வந்து விட்டார். இனி அவர் காமு 'காமு என்று அலறுவார். பாவம்! நீதியையும் சட்டத்தை யும் பயமுறுத்தி கொண்டிருக்கும் அவர் என்னிடம் ஏமாந்து கொண்டிருக்கிரு.ர். பிரதிவாதி பயங்கரம் இதென்ன அபசகுனம் மாதிரி. பெண் பார்க்க புறப்படற நேரத்திலே இப்படி ஒரு லெட்டர் வந்திருக்கே! பெரிய குடும் பம்னு நினைச்சு பெண் கேட்டேன். பொண்ணு புரபசராக இருக்கான்னு சொன்னங்க. ஜாதகமெல்லாம் கணஜோராக இருந்தது. இப்படி என்னை அவமானப்படுத்து வாங்கன்னு நினைக்கலே. 'கல்யாணம் வச்சுக்கிறதா இல்லை. ஆகச்சே நீங்க பெண் பார்க்க வரவேண்டாம்'னு எழுதியிருக்காங்களே? ஒரு வேளை நம்ம பையனை விட உயர்ந்த படிப்பிலே பெரிய மிராசு வீட்டிலே வரன் குதிர்ந்திருக்குமோ! கிடைக்கட்டுமே! அதுக்காக பேசின. பேச்சை மாத்திப்பிடுறதா? மனிதனுக்கு வாக்குறுதின்னு ஒன்னு வேண்டாமா? என்ன இருந்தாலும் ஜட்ஜ் ஜகளுதன் இப்படி அல்பத்தனமா ந ட ப் பா ன்னு நெனைக்கலே. - கோபிகிட்டே நான் எதை சொல்றது? அவனே ஒரு முன் கோபி. போலீசு இலாக்காவுக்கு போக வேண்டியவன் எப் படியோ பொருளாதாரம் படிச்சுப்புட்டான். விஷயத்தைச் சொன்ன வெட்டிக் கொன்னுடுவான். கலியாணம் வேண் டாம்ன்னு சொன்னவனை நான் கட்டாயப் படுத்தினேன். அது மட்டுமா? கண்ணெடுத்துப் பார்க்காதிருந்த அவ ன் சித்தியை பெண் பார்க்க நீதான் அழைக்கணும்னு சொன் னேன். நான் போய் அவன் கிட்டே தலைகுனிஞ்சு நிற்கனும், எத்தனையோ நீதிபதிகளை பதைபதைக்க வச்சுருக்கிறேன். இப்ப நான் பதைபதைச்சுப்போய் நிற்கிறேன். கோபிகிட்டே போயி இதைச் சொன்ன அவன் என்ன சொல்லுவான். நீங்க நேராப்போயி என்ன காரணம்னு தெரிஞ்சுக்கிட்டு வாங்கம் 103