பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போய்விட்டது. அதற்குக் காரணம் அவளுக்குக் குழந்தை இருக் கிறது என்பது உனது மனக்குமுறல்! என் அம்மாவின் அன்பை இழந்ததற்கு நீ மட்டும் பொறுப்பாளி அல்ல. நானும் அந்தப் பொறுப்பை ஏற்றுக் .ெ கா ள் ள வேண்டியவன்தான்! இதில் எதற்கு ஒளிவு மறைவு எல்லாம்?” 'இருந்தாலும் அத்தை என்னே இவ்வளவு அசிங்கப்படுத்தி யிருக்க வேண்டியதில்லை. நான் அவர்களே எவ்வளவோ மதித் தேன். மரியாதை செலுத்தினேன். அவர்கள் அதை வர வரப் பொருட்படுத்துவதே இல்லை. எல்லாமே மீனதான்.அவர்களுக்கு! அதனலே மீனவும் என்னை மதிப்பதில்லை. அக்காஅக்கா'என்று அன்பொழுகப்பேசிய மீன இப்போது ஜாடை பேசத்தொடங்கி விட்டாள்.' - 'மீன. ஏழை வீட்டுப்பெண்; நம் குடும்பத்திற்குப் பொருத்த மானவள்; கருப்பாக இருந்தாலும் கவர்ச்சியாக இருக்கிருள் என்று என் தம்பிக்கு மீனவை முடித்துவைத்தவளே நீதானே!” 'அதையெல்லாம் இப்போது யார் நினைத்துப் பார்க்கிருர் கள்! மீனவின் தாயும் தகப்பனும் நம்ம வீட்டுக்கு நடையாய் நடந்தார்கள். நீ சொன்னல்தான் உன் மாமி கேட்பாள் என்று என்னைக் கெஞ்சாக் குறையாகக் கேட்டார்கள். இப் போ து அவர்களிடம் நான் படுகிறபாடு சொல்லத் தரமில்லாததாகி விட்டது!’ 'இதெல்லாம் ஒரு பெரிய குடும்பத்தில் நடக்கக்கூடிய சம் பவங்கள் தான்! அதற்காக உன் மனக்குறையை நான் மதிக்கா மல் இல்லை கண்ணு' - 'எனக்குப் பிராப்தம் இவ்வளவுதான் என்று நினைத்து மீன வின் பிள்ளையை என் பிள்ளையாக எண்ணி மகிழக்கூட அனு மதிக்க மாட்டோம் என்கிரு.ர்கள். பிள்ளையைத் துரக்கிக்கொஞ் சினுல் வேலைக்காரியை அனுப்பி குழந்தையைப் பிடுங்கி வைத் துக் கொள்கிருர்கள்.” கண்ணுவின் இந்தப் பிடியிலிருந்து கண்ணப்பனல் தப் ப முடியவில்லை. - - I2