பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"என்னம்மா, காலை நேரத்திலேயே அவனைப் பாடாய்ப் படுத்த ஆரம்பித்திருக்கிருய்?’ என்று கேட்டுக் கொண்டேதான் நுழைந்தார். அவர் தோளில் அவரது பேரப்பிள்ளை-மீனவின் மகன்-தொத்திக் கொண்டிருந்தான். பெரியப்பாவைக் கேளுடா, எ ன் னே ப் போல ஒரு புள் ளேயை நீங்களும் பெத்தா என்னப்பானு கேளுடா” என்று பேரனுக்குச் சொல்லிக் கொடுத்தார் முத்துக்கருப்பர். இதைக் கேட்டதும் கண்ணப்பன் துணுக்குற்றுப்போனன். கண்ணு எவ்வளவு பெரிய தாக்குதல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிருள் என்பதை அப்போதுதான் நிதர்சனமாகத் தெரிந்துகொண்டான். கண்ணு துக்கத்தைத் தாங்க முடியாமல் வீட்டின் பின்கட் டுக்கு விரைந்தாள். கண்ணப்பனும் அவளுக்கு ஆறுதல் சொல்லு வதற்காக கண்ணுவைப் பின்தொடர்ந்து சென்ருன். எவ்வளவு சமாதானம் சொல்லியும் கண்ணுவின் அழுகை அடங்கவில்லை. - 'இந்த வீட்டில் இதற்கு மேல் ஒரு விநாடி கூட இரு க் க முடியாது’ என்ருள் கண்ணு. - 'கண்ணு, உன்னுடைய முடிவுக்கு நான் உனக்கு முன்ன டியே வந்து விட்டேன். ஆனல் எனக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. அதை மட்டும் நீ எனக்கு அனுமதி! கண்ணு, என் பெற்ருேர்கள் உன்னை மட்டும் பரிகசிக்கவில்லை. என்னையும் சேர்த்துத்தான் இழிவு படுத்துகிரு.ர்கள். அதனல்தான் கொஞ் சம் அவகாசம் தேவை என்கிறேன்.' "பொறுத்துப் பொறுத்துத்தான் என் கன்னங்கள் நிரந்தர மாகக் கறை படிந்து விட்டதே! இன்னும் நான் பொறுத்தால் என் கண்களே அவிந்து போனல்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.” இந்த நேரத்தில் மீளு அங்கே வந்தாள். - "அக்கா, இந்தப் பிரச்சினையில் நீங்கள் என்னைச் சம்பந்தப் படுத்திப் பேசுவது சரியில்லை." -

  1. 4