பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதற்கு கண்ண ஏதாவது விபரீதமான பதிலைக் கூறி விடு வாளோ என்று நினைத்து கண்ணப்பனே குறுக்கிட்டு விட்டான். 'மீன, நம் வீட்டுப் பிரச்சினை உன்னைப் பற்றியோ, கண்ணு வைப் பற்றியோ எழுந்ததல்ல; வெளிப்படையாகச் சொல்லு வதானல் அது என்னைச் சுற்றிவளைத்திருக்கும் பிரச்சினை. நான் தான் அதற்கு முடிவு எடுக்க வேண்டும். ஆனல் மீன நீ ஒன்றை மட்டும் மறந்து விடக்கூடாது. நீ இந்த வீட்டில் சிறிய மருமக ளாக வருவதற்குக் கண்ணுதான் முக்கிய காரணம் என்பதை மட்டும் மறந்துவிடாதே!’ மீன வாயடைத்துப் போளுள். ஏனெனில் கண்ணப்பனும், மீனவும் ஒரு நாள் கூட நேருக்கு நேராக நின்று பேசிக் கொண்ட தில்லை. தன் கணவரோடு பிறந்த மூத்தவரை தமிழ்நாட்டுப் பெண்கள் அவ்வளவு உயர்வாக மதிப்பார்கள். நாட்கள் செல்லச் செல்ல கண்ணுவின் உள்ளம் மேலும் துயரத்திற்கு இலக்காகிவிட்டது. அந்த அனல் கண்ணப்பனையும் லேசாகச் சாடியது. எல்லாவற்றிற்கும் மனம் தான் காரணம் என்று சொல்லுவது வெறும் பேச்சல்ல. அது ஒரு தத்துவம்; பெரிய உண்மை. நமக்குப்பிடித்தமானவர்கள் பாதிக்கப்பட் டால் நமக்கு ம ன ம் துடிக்கிறது. நமக்கு வேண்டாதவர்கள் சகிக்க முடியாதபடி துன்பப்பட்டால் கூட நம் மனம் துாக்கதி லிருந்து கண் திறக்க மறுத்து விடுகிறது. 'கண்ணு, குடும்பம் என்பது ஒரு குருவிக் கூடு மாதிரி. அதில் ஆயிரம் பின்னல்கள் இருக்கும் என்று நீ வந்த மறுதினமே சொன் னேனே இப்போது ஞாபகம் இருக்கிறதா?” "நீங்கள் குருவிக்கூடு என்றுதானே சொன்னிர்கள்? இது பாம்புப் புற்முக அல்லவா அத்தான் மாறி விட்டது: . 'கண்ணு, உன் மன்த்தை ஆற்றுவதற்கு நான் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.” “எத்தனை நாளைக்குத்தான் மகாத்மா சொன்னர் மறைமலை 15