பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் போட்டிகளையும் வைப்பான். இப்படியே கண்ணப்ப னின் தமிழார்வம் வளர்ந்தது. கண்ணப்பனுக்கு பெற்றேர்கள் மீது தணியாத மரியாதை உண்டு. அதைப்போலவேதான் அவன் தம்பி சொக்கநாதனிடத் திலும்! ஊருக்கு வந்தால் சின்ன விஷயத்தைக்கூடத் தம்பியைக் கலக்காமல் செய்ய மாட்டான். கண்ணு அந்த ஊரிலேயே அழகான பெண். அவளுடைய முழுப்பெயர் கண்ணுத்தாள். அந்த ஊர்க்கோயிலில் குடிகொண் டிருக்கும் தெய்வத்தின் பெயரும் கண்ணுத்தாள்தான். கோயி லூரில் பெரும்பகுதி மூத்த பெண்களுக்குக் கண்ணுத்தாள் என் றும், மூத்த பையன்களுக்குக் கண்ணப்பன் என்றும் தான் பெயர் சூட்டுவார்கள். திருமணத்திற்குப் பிறகு தான் கண்ணப்பன் கண்ணத்தாளை கண்ணு என்று .ெ ச ல் ல மா. க அழைக்கத் தொடங்கினன். கண்ணப்பனுக்கும், கண்ணுத்தாளுக்கும் நிச்சயமாயிற்று. கண்ணப்பனைக் கேட்காமலே முத்துக் கருப்பர் கண்ணுத்தாளை நிச்சயித்துவிட்டுக் கடிதம் எழுதினர். ஏனென்ருல் கண்ணத்தா ளுக்கு அவ்வளவு போட்டி இருந்தது. - கண்ணப்பன் தமிழகம் திரும்பி கண்ணுத்தாளே மணந்து கொண்டான். அதற்குப் பிறகு கண்ணப்பன் கண்டிக்குப் போக வில்லை, ஆனால் அங்கே பழகிய தேகப் பயிற்சியும், அங்கே ஏற் பட்ட தமிழ்ப்பற்றும் கண்ணப்பன் உடம்போடு ஒட்டிய அவயங் களாகி விட்டன. - ஊருக்கு வந்ததும் ஊரின் ஒரு முனையில் மறைமலை அடிகள் மன்றம் அமைத்தான். மன்றத்தின் கொள்ளையில் ஒரு தேகப் பயிற்சி சாலையையும் நிறுவிக்கொண்டான். - கண்ணத்தாளும், க ண் ணப்பனும் எர்ணுகுளத்திற்குப் பயணமானர்கள். கண்ணப்பன் எர்ணுகுளத்தில் ஒரு பைனன் சிங் கம்பெனியைத் தொடங்கினன். அங்கு அவன் என்னதான் தொழில் நடத்திலுைம் அங்கும் அவனது தமிழ்ப்பற்று அவனே

  1. 8