பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கண்ணு என்ன கடிதம் அது? "உங்கள் மாமனர் எழுதியிருக்கிருர் என்னஎழுதியிருப்பார் என்று உங்களுக்குத் தான் தெரியுமே! அவர் கவலே அவருக்கு!” 'உனக்கு வளை காப்பு வைக்க எனக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டதே என்று எழுதியிருக்கிருரா கண்ணு? 'அதுதான் சொல்லி விட்டீர்களே! அதே தான்!” - "நாட்டிலே பிள்ளைகளுக்கா பஞ்சம்! எத்தனையோ பேர் பிள்ளைகளை ஏராளமாக பெற்றுப் போட்டு விட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கிருர்கள். அவைகளில் நாம் ஒன் ைற எடுத்துக் கொண்டால் போகிறது! இதற்கு ஏன் கப்பல் மூழ்கி விட்டதைப் போல் கண்களைக் கசக்கிக் கொண்டே இருக்க வேண்டும்? “ஊரார் பிள்ளையை எடுத்து வளர்த்து விடலாம்; அதை ஊர் ஒப்புக் கொள்ளுமா? உங்களுக்கும் எனக்கும் உள்ள அவப் பெயர் தான் போய்விடுமா? "ஊர் இதுவரை எடுத்தவுடன் எதையாவது ஒப்புக்கொண் டிருக்கிறதா? அதிலும் சொந்த ஊர்-பிறந்த ஊர் எதையாவது பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டதாகச் சரித்திரம் உண் டா? கஷ்டப்பட்டு ஒருவன் பணக்காரணுகி விட்டால் அவனைக் கள்ள நோட்டுக்காரன் என்பார்கள். உண்மையிலேயே ஒருவன் கள்ளநோட்டின் மூலம் பணக்காரனகியிருப்பான். அவனை இந் திரன் சந்திரன் என்று வர்ணிப்பார்கள். கண்ணு நான் சொல்லு வதை நம்பு. ஊருக்காக வாழ்ந்தவர்கள் யாரும் இறுதிவரை நிம் மதியாக இருந்ததே இல்லை. உனக்கு குழந்தை வேண்டும்; அதை நீ கொஞ்சி மகிழவேண்டும். எனக்கும் புரியாமலில்லை. குழந்தை கள் பூக்கள் மாதிரி. அவை எந்தத் தோட்டத்தில் மலர்ந்தாலும் அவைகளின் மனம் மாருது. கொள்ளையிலே பூக்கும் மல்லிகைக் கும் கோயில் நந்தவனத்திலே பூக்கும் மல்லிகைக்கும் வித்தி யாசம் உண்டா? ஏழை வீட்டுக் குழந்தை மூக்கிலே சளியை வடித்துக்கொண்டு தெருவிலே விளையாடும்; பணக்கார வீட்டுக் குழந்தை பளிங்குத் தரையில் ரப்பர் பொம்மைகளே வைத்து விளையாடும்! ஆனால் இரண்டு குழந்தைகளின் முகங்களிலே கூத் 21