பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கடிதத்தை எழுதிப்போட்டான். திருவனந்தபுரம் ஒருபெரிய நகரம்; மொட்டையாக கொரியன் என்று மட்டும் எழுதிப் போட்டால் கிடைத்து விடுமா? கொரியன் எ ன் ன அரசியல் வாதியா, பெயரைப் பார்த்ததும் கடிதம் வீடு போய்ச் சேர் வதற்கு? - பதினைந்து நாட்கள் வரை பதில் இல்லை. திடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கண்ணப்பன் திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டுப் போனன். அங்கு கொரியன் என்ற பெயரில் பல டாக்டர்கள்இருந்தார்கள். எல்லோரையும் பார்த்தான். உருவம் மட்டுப் படவில்லை. இறுதியில் கண்ணப்பன் விரக்தி யடைந்து எர்ணுகுளத்திற்குத் திரும்பும் போது அவனுடைய நண்பன் டாக்டர் கொரியனைப்பற்றி வியப்புறும் செய்தி கிடைத்தது. திருவிதாங்கூர் மன்னரின் டாக்டரே கண்ணப்பனின் நண்பன் கொரியன்தான்என்பதை அறிந்து அளவில்லா மகிழ்ச்சியடைந்து அவனை நேரில் சென்று பார்த்துவிட நடந்தான். கொரியன் வயதில் இளைஞன். கண்ணப்பன் வயதுதான் அவனுக்கும். பழைய பாணியில் கேரள நாட்டு முறையில் கட் டப்பட்ட அரண்மனை போன்ற ஒரு மாளிகையில் கொரியன் குடியிருந்தான். சுவரில் பல படங்கள் மாட்டப்பட்டிருந்தன. கண்ணப்பன் அவனேக் கண்டதும் கட்டித் தழுவி அணைத்துக் கொண்டான். - பத்தாண்டுகளுக்குப் பிறகு என் நினைவு உனக்கு எப்படி வந்தது?? கொரியன் பிரியத்தோடும், ஆச்சரியத்தோடும் கேட் டான். 'எனக்குக் கூட அது ஒரு சிதற லான நினைவாகத்தான் தோன்றியது. தெருவில் போய்க் கொண்டே இருந்தேன். கொரி யன் டீ ஸ்டால் என்ற ஒரு போர்டைப் பார்த்தேன். அது முதல் உன்னே வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன்.” 'உன் தமிழார்வமெல்லாம் எப்படி இருக்கிறது?’ 'தமிழர்களைப் பொறுத்தமட்டில் பண ஆசையும், தமி ழாசையும் ஒன்றுதான். விட்டுக்கொடுக்க மாட்டார்கள்!” 24