பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊரில் இல்லாத நேரத்தில் திடீரென்று அவரிடமிருந்து ரிசல்ட்: வந்துவிட்டது. அதில் அவர் இனிமேல் உனக்குப் புத்திர பாக் கியம் இல்லை! இந்த ரகசியம் உன் மனைவிக்குத் தெரியக்கூடாது' என்று எழுதி விட்டார். நான் இல்லாத நேரத்தில் அந்தக் கடி தம் வந்ததால் என் மனைவி அ ந் த க் கடிதத்தை உடைத்துப் பார்த்து விட்டாள். அந்தக் க டி த மே அவளுக்கு எமனுக அமைந்து விட்டது. அவளே எவ்வளவோ தேற்றினேன். எனக்கு இந்த வயதி லேயே, வாழ்க்கையின் எல்லே தெரிந்துவிட்டதே இனிமேல் நான் ஏன் வாழவேண்டும்” என்று அவள் என்னைக் கேட்டது என் நெஞ்சில் இன்றும் கல் வெட்டைப்போல் பதிந்து கிடக்கிறது. அது மட்டுமா அவள் கேட்டாள்? 'ஒரு புருஷனின் இரத்தத்தில் கருப்பொருள் இல்லை என்று மனைவிக்குத் தெரிந்து விட்டால் அவளுக்கு புருஷனிடத்தில் மரியாதைக் குறைவும், தாழ்வு மனப் பான்மையும் எப்படி ஏற்படாமல் போகும்? அந்தப் பாவத்திற்கு ஆளாக நான் விரும்பவில்லை’ என்றும் என் மனைவி எனக்கு போதனைகளைக் கூறினள். மிஸ்டர் கண்ணப்பன் நான் எத்தனை நோயாளிகளைக் காப்பற்றி அவர்களைச் சிரிக்க வைக்கிறேன். என்னைச் சிரிக்க வைக்க இறைவன் மறந்து விட்டான்.” 'நான் சிரிக்காவிட்டாலும் பரவாயில்லை. என்னைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று எண்ணி வாழ்ந்த என் மனைவியை இழந்து நான் தினசரி அழுதுகொண்டிருக்கிறேன்!” கொரியன் விவரம் அறியாத குழந்தையைப்போல் தேம்பின்ை. - - - - - - - -. பெரிய டாக்டர் எழுதிய கடிதத்தை உன் மனைவி படிக் காதிருந்தால் அவள் இந் த முடிவுக்கு வந்திருக்க மாட்டாள் “நிச்சயமாக வந்திருக்கவே மாட்டாள்.புருஷனும், மனைவி யும் எவ்வளவுதான் பாசமுள்ளவர்களாக இருந்தாலும் சில விஷ் யங்களை மனவியிடம் வடிகட்டித்தான் சொல்ல வேண்டும். மனித வாழ்க்கைக்கு- அதுவும் ஒரு குடும்ப வாழ்க்கைக்கு - என் வாழ்க்கைக்கு ஒரு அபாய அறிவிப்பு: என்ருன் கொரியன். 26