பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனல் - இவரையாவது எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள். இந்த விஷயம் காற்றுவாக்கில்கூட இவர் மனைவிக்கு எட்டிவிடக் கூடாது. இதற்கு மாற்று மருந்து இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை' பெரிய டாக்டர் ஒரு பெரிய கொலை வழக்கில் தீர்ப்புச் சொல்வதைப் போல் அறிவித்தார். *: - கோயிலூர்! - - * * கண்ணப்பனின் தகப்பனர் முத்துக் கருப்பர் நிம்மதியற் றிருந்தார். ஊரார் பேச்சு அவர் நெஞ்சைத் துளைத்துக் கொண் டிருந்தது. மூத்தவனே வீட்டைவிட்டுத் துரத்தி விட்டு முண்டம் போல வீட்டிலே உட்கார்ந்திருக்காரே இவருக்கு இருதயமே இல்லையா?” என்று பக்கத் து வீட்டுக்காரர்கள் கூட பேசத் தொடங்கி விட்டார்கள். ஒரு விழாவிற்கோ, கோயிலுக்கோ அவரால் மகிழச்சியாகப் போய் வரமுடியவில்லை. திடீரென்று முத்துக் கருப்பர் கண்களை மூடி விட்டால் என்ன செய்வார்? கொள்ளி வைக்கவேண்டியவன் கொச்சியி லிருந்து வந்து தானே பிரேதத்தை எடுக்கவேண்டும்? அதற்குள் பிண்ம் நாறிப் போகாதா? மூத்தவன் இருக்க, இளே ய வ ன் கொள்ளி வைக்கலாமா?’ . . . . முத்துக்கருப்பர் உயிரோடு திடகாத்திரமாக இருக்கும் போதே அவரது பிரேதத்தைப்பற்றி ஊரார் பேசத் தொடங்கி விட்டார்கள். எவ்வளவோ தூற்றல்களைத் தாங்கிக் கொண்டு பழகப்பட்டவர் முத்துக்கருப்பர். மிகவும் கஷ்டப்பட்டு சிங்கப் பூருக்கு போய் இன்னெரு வீ ட்டில், கணக்கப் பிள்ளையாகச் சேர்ந்து, பின்பு தனிக்கடை வைத்து முன்னேறியவர். முதலில் யாரும் அவருக்கு பெண் கொடுக்க முன் வரவில்லை. குடியிருக்க வீடில்லாதவன், சம்பளத்திற்கு வேலை செய்பவன் என்றெல்லாம் அ வரை இகழ்ந்தார்கள். அப்போதெல்லாம் சின்னவயதில் அந்தப் பேச்சுக்களே சவாலாக ஏற்றுக்கொண்ட முத்துக்கருப்ப ரால் இப்போது ஊரில் பேசப்படும் அவதூறுகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கொச்சிக்குப் போய் எப்படியாவது கண்ணப்பனக் கூட்டி வந்து விடுவது என்று முடிவு செய்து விட்டார். - -- - -. " . . . - 30