பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{} "அப்படி என்ன அவளுக்கும், நமக்கும் அவ்வளவு கொடிய மனஸ்தாபம்?" 'இந்த வீட்டுக்கே இனிமேல் அவளுக்கு வளைகாப்பு நடத்தி விட்டுத்தான் வருவாளாம்; போகும்போதே இப்படி ஒரு சபதத் தோடு போயிருக்கிறவளேக் கூப்பிட்டால் வருவாளா? அவன் தான் அனுப்புவான?” "அங்கே உற்பத்தியாகிற கரு இங்கே இருந்தால் உற்பத்தி யாகாது என்கிருளா? இது என்ன பைத்தியக்காரத்தனமான சபதம்!” என்று முத்துக்கருப்பர் முனங்கிக்கொண்டிருந்தார்: இந்தச் சமயத்தில் வாசல்பக்கமாக இருந்து மீளுவின் மகன் ஒடி வந்து முத்துக்கருப்பரிடம் கூவினன். "தாத்தா! பெரியம்மா வந்துக்கிட்டிருக்கு!” "அட போடா இவைெருத்தன்! உங்க பெரியம்மா உன் னேப் போலே ஒரு பிள்ளையைச் சுமந்துகொண்டுதான் நம்ம வீட்டுக்கே வருவாளாம்!” என்று செல்லமாகக் கடிந்துகொண் டார். . . . . ஆனல் சிறுவன் சொன்னது உண்மைதான். கண்ணுத்தாள் தங்க ரதத்தைப்போல உள்ளே வந் து கொண்டிருந்தாள். முத்துக்கருப்பரும், அவர் மனைவியும் திகைத்துப் போனர்கள். - - தமிழ் நாட்டில்தான் ஒரு பெண்ணின் வரலாறு ஒரு நாவலைப்போல் அமைந்துவிடுகிறது. அதுவும் ஒரு அழகான பெண்ணுக்குத் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அவளுடைய வாழ்க் கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. திருவனந்தபுரத்தில் சோதனை செய்து பார்த்துவிட்டு வந்த பிறகு கண்ணப்பன் தெம்பில்லாதவனைப்போல் நடந்துகொண் டான். தன் வாழ்க்கையில் ஊடாடிவிட்ட அந்த ரகசியத்தை எப்படிக் காப்பாற்றப் போகிருேம் என்ற மன உளைச்சல் அவ னேயும் அறியாமலேயே கண்ணப்பனைச் சோர்ந்திடச் செய்தது. 32