பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனதிலே ஊறிக்கொண்டிருக்கும் கூச்சத்தை மறப்பதற்காக சில நாட்கள் கண்ணுத்தாளைப் பிரிந்திருக்க விரும்பிய அவன், அவளை ஊருக்குப் போய் அவளுடைய பெற்ருேர்களைப் பார்த்து விட்டு வரும்படி அனுப்பிவைத்தான். அதற்கு அனுகூலமாக கண்ணுத்தாளின் தகப்பனர் உடல் நலமில்லாதிருக்கிருர் என்று வந்த கடிதத்தைப் பயன்படுத்திக் கொண்டான். . கண்ணுத்தாள் ஊருக்குப் போய் பதினைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. அவளிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. கண்ணப்பன் தனி ஆளாக இருந்து ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மீன் அவன் உடம்புக்கு ஒத்துவராத ஒரு உணவு. கொச்சியில் மீன் சமைக்காத கடை அரிதாக இருந் தது. அதனல் பெரிதும் துன்பப்பட்டான். - கண்ணத்தாள் அவளது தாய் வீட்டில் இத்தனை நாட்கள் தொடர்ந்து இருந்ததே இல்லை. திருமணமான காலத்திலிருந்து ஒரு முறை கூட அவள் சேர்ந்தாற்போல இரண்டு நாட்கள் எங்கேயும் தங்கியதும் இல்லை. - - "பாவம் கண்ணுத்தாள் தனக்குக் குழந்தையே பிறக்காது என்ற தகவல் அவளுக்குத் தெரிந்தால் அவளும் டாக் டர் கொரியன் மனைவியைப் போலத்தான் முடிவெடுப்பாள்.” கண் ணப்பனுக்கு அவன் மனேவியின் அழகின் மீதுள்ள மயக்கத்தை விட அவளுடைய குணத்தின் மீதுள்ள பற்றுதான் அதிகமாக இருந்தது. 'பெண்ணின் அழகு பூவின் அழகைப்போல் நிரந்தரமற் றது. ஆனல் பெண்ணின் குணம் தங்கத்தின் குணத்தைப்போல் ஒளிமங்காத்து” என்று அடிக்கடி கண்ணப்பன் கண்ணுத்தா ளிடம் கூறி அவளைப் பெருமைப்படுத்தியிருக்கிருன். கண்ணுத்தாளும் அவனிடம் அப்படித்தான் பழகிள்ை. எவ்வளவு நேரமானலும் கண்ணப்பன் வந்த பிறகு தான் அவள் சாப்பிடுவாள். கண்ணப்பனுக்குப் பிடித்தமானதைத்தான் அவள் சமைத்து வைப்பாள். ஒரு பெண்ணுக்குப் புருஷன்தான் மூலதனம். புருஷன் அவளிடம் காட்டும் அன்புதான் மனைவிக் 33