பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குக் கிடைக்கும் வட்டி-என்பதில் கண்ணுத்தாள் இரண்டா வது கண்ணகியாகவே விளங்கிள்ை. - . கண்ணுத்தாள் கொச்சிக்குத் திரும்பாதது கண்ணப்பனுக் குப் பலவிதமான சந்தேக்ங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தது. இத்தனை வயதுக்கு மேலே நமக்கு இனி பிள்ளையே பிறக்காது என்று அவள் தீர்மானித்து தகாத முடிவுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது? எப்போதுமே நெருக்கடியான நேரங்களில் தான் மனிதனுக்கு குழப்பங்கள் ஏற்படுகின்றன. அதுவும் அடிக் கடி நெருக்கடிகளைச் சந்தித்திராத செல்லப்பிள்ளைகளுக்குக் குழப்பங்கள் வந்துவிட்டால் அவர்கள் கற்பனையின் உச்சக் கட்டம்வரை போய்த்தான் திரும்புவார்கள். - - கண்ணப்பர் இதற்கெல்லாம் குழம்பலாமா? - என்று யாராவது அவனே க் கேட்டால், அதிகமாக இலக்கியமோ, தமிழோ படித்துவிட்டால் இப்படித்தான் என்பான். அதோடு விடமாட்டான் - கவிச்சக்கரவர்த்தி கம்பன் சிறிய துன்பத்தைக் கூடத் தாங்கிக் கொள்ள மாட்டாராம் நாவலாசிரியர் டுமாஸ் குடும்பக்கவலையால் நாவல் எழுதுவதையே நிறுத்தி விட்டாராம் அதில் நான் மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா?- என்று விரிவுரை வேறு சொல்ல ஆரம்பித்து விடுவான். புதிதாகச் சந் திப்பவர்கள் அவனே ஒரு மாதிரியாக நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அவனது நடவடிக்கைகளும் பேச்சு வார்த்தைகளும் அமைந்துவிடும். . x - ------- - - இளகிய உள் ளத் தை எளிதில் துன்பம் வசப்படுத்திக் கொண்டு விடுகிறது. கண்ணிரைக் கண்டு கலங்கும் நெஞ்சம் துன்பம் ஏற்பட்டதும் நடுங்கித் தவிக்கிறது. அதனல்தான் இளகிய நெஞ்சமுடையவர்கள் கோழை க ளாக வாழத் தொடங்கிவிடுகிருர்கள். - . . . . . . . கண்ணப்பன் பிறவியில் கோழை அல்ல; சபலத்தால், தோல்வி மனப்பான்மையால் கோழையாகி விட்டான். துாற்றல் களும் கேலிப்பேச்சுகளும் அவனை அரைமனிதனக்கி விட்டன. மனிதமனம் கூட ஒரு வகையான உலோகம் போன்றதுதான். 34