பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுபத்ராவிடமிருந்து எந்த பதிலுமில்லை! காசியப்பர் கனிவாகப் பேசினர். உனக்கு இஷ்டமில்லா விட்டால் எனக்கும் அவசியமில்லை. ஏதோ ராவுத்தர் வழக்கம் போல் அழைத்தார்; வந்தேன். உன்னைப் பார்த்தால் எனக்கும் இரக்கம்தான் வருகிறது. எனக்கும் பிள்ளைகள் இருக்கின்றன. ஆனால் எனக்கு மனைவி இல்லை. இறந்துவிட்டாள். அதனால்தான் நான் இப்படி அலைகிறேன்” காசியப்பர் அருள் வந்தவரைப் போல சுபத்ராவின் எழிலில் மயங்கி உண்மைகளைக் கொட்டிக் கொண்டிருந்தார். இந்தக் கட்டத்தில் சுபத்ரா பேசத் தொடங்கிள்ை. அது காசியப்பருக்கு மீனட்சியம்மனே வா ய் தி ற ந் து பேசுவது போலிருந்தது. "என்னை நீங்கள் மன்னித்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும். நான் பி. ஏ. வரை படித்தவள். எனக்கு திருவனந்த புரத்தில் ஒரு இண்டர்வியூ அதற்காக எர்ணுகுளத்திலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு வந்தேன். வழியில் இரண்டு போலீஸ்காரர்கள் மடக்கி இங்கே கொண்டுவந்து சேர்த்து விட்டார்கள். காசியப்பர் எதுவும் பேசாமல் தலையனேயில் சாய்ந்தபடி இருந்தார். - பாவங்களுக்குத் தண்டனை உண்டென்ருல் புண்ணியங் களுக்கு சக்தி இல்லாமல் போகாது. அந்தப் புண்ணியத்தை நீங்கள் எனக்குச் செய்யுங்கள்.’’ என்ருள் சுபத்ரா, ‘சுபத்ரா, நீ இந்த முரடனிடமிருந்து தப்புவது மிகவும் கஷ்டம். உன் இரத்தத்தை உறிஞ்சிவிட்டுத்தான் இவன் உன்னை விடுவான். என்னல் உனக்கு செய்ய முடிந்த உதவி நீ என்னிடம் பவ்யமாக ந ட ந் து கொண்டாய் என்று சொல்லுவதுதான். அவன் அதிகாலையில் வந்து - செட்டியார் கொடுத்த பணம் எங்கே என்று கேட்டான். அதற்காக உன் கையில் இருநூறு ரூபாய்களைத் தந்து விட்டுப் போகிறேன்” என்று முற்றிலும் மாறியவராய் காசியப்பர் பேசினர். 5 I