பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுபத்ரா பி. ஏ. படித்த சர்டிபிகேட்டும், அவளது இண்டர் வியூ கடிதம்தான் காசியப்பரை ஒரு தந்தை ஸ்தானத்திற்குக் கொண்டுபோய் விட்டது. காசியப்பர் புறப்படும்போது சுபத்ரா ஒரு துண்டுச் சீட்டை அவரிடம் கொடுத்தாள் அவர் அந்தச் சீட்டை அந்த இடத்தில் பிரிக்க விரும்பாமல் வெளியேறிவிட்டார். சுபத்ராவின் குடும்பம் கண்ணிரில் மிதந்தது. அவளுடைய தாய், தகப்பன், சகோதரன் எல்லோருமே இருட்டறையில் அடைக்கப்பட்ட கொக்குகளைப் போல் திகிலடைந்து போய் விட்டார்கள். . . "எங்கள் சுபத்ரா மினு மினு என்று இளமைப் பூரிப்பில் மின்னிக் கொண்டிருந்தவளாயிற்றே, அவள் எந்தக் கழுதின் கையில் சிக்கினளோ, உயிரோடுதான் இருக்கிருளோ, இறந்து தான் போய் விட்டாளோ?’ என்று அவர்கள் தினசரி புலம்பிக் கொண்டிருந்தார்கள். . - இரண்டு மாதங்கன் கழித்து அவர்களுக்கு ஒரு க டி த ம் வந்தது. காசு இல்லாமல் தவிக்கும் ஹாஸ்டல் மாணவனுக்கு தெருவில் ஒரு மணிபர்ஸ் கிடைத்ததைப்போல் மகிழ்ச்சியோடு கடிதத்தைப் பிரித்தார்கள். 'அன்புடையீர், வணக்கம். நான் உங்களில் யாருக்கும் அறிமுகமில்லாதவன். இருந்தாலும் நான், பிள்ளைப் பாசத்தை உணர்ந்தவன் என்ற முறையில் இந்தக் கடிதத்தை எழுதியுள் ளேன். - - - - செல்வி சுபத்ரா திருநெல்வேலியில் கிருஷ்ணராசபுரத்தில் உள்ள ஒரு விபச்சார மாளிகையில் சிக்கிக் கொண்டு ஒற்றைச் சிறகினல் துடித்துக்கொண்டிருக்கும் பறவையைப் போல தரை யில் குதித்துக் கொண்டிருக்கிருள். அ ந் த விபச்சார விடுதி ராசாக்கிளி என்ற முரடனல் நடத்தப்பட்டு வருகிறது. . . இப்படிக்கு காசியப்பர்.” 52